மாரி செல்வராஜோட கனவு நிறைவடைஞ்சுடுச்சாம்... எந்த விஷயத்துலன்னு பாருங்க!

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாமன்னன் படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தனது தொடர் கனவு நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியதன்மூலம் கோலிவுட்டில் சிறப்பான இயக்குநராக கவனம் பெற்றுள்ளார். இந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு படமும் சாதிய அரசியலை கன்னியமாகவும் வீரியமாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

 மாரியின் மூன்றவாது படம்

மாரியின் மூன்றவாது படம்


இந்நிலையில் இவர் தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படம் நேற்றைய தினம் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மாமன்னன் படம்

மாமன்னன் படம்

படத்திற்கு மாமன்னன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக மாரி செல்வராஜ் சென்னையில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போதே படம் குறித்த தகவல்கள் வெளியாகின.

படப்பிடிப்பு துவக்கம்

படப்பிடிப்பு துவக்கம்

நேற்றைய தினம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் அதன் புகைப்படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் பகத் பாசில் வில்லனாகவும் வடிவேலு காமெடியனாகவும் இணைந்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

நனவான தொடர் கனவு

நனவான தொடர் கனவு

இதனிடையே வடிவேலுவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறித்து மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது தொடர் கனவு இதன்மூலம் நனவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த போஸ்ட்டிற்கு ரசிகர்களுக்கு உற்சாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

 வடிவேலு மகிழ்ச்சிப்பதிவு

வடிவேலு மகிழ்ச்சிப்பதிவு

இதனிடையே நடிகர் வடிவேலுவும் இந்த படத்தில் இணைந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மாரி செல்வராஜுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை அடுத்தடுத்து பகிர்ந்துள்ள அவர், உதயநிதி, மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X