ரஜினிகாந்துடன் இணைய தயாராகும் பிரபல இயக்குநர்.. ஸ்கிரிப்ட் ரெடி.. அவரே சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து கோலிவுட்டில் சிறப்பான கவனத்தை பெற்றுள்ள இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தை கொடுத்திருந்த ரஜினிகாந்த், தற்போது ஜெய் பீம் என்ற சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருந்த டிஜே ஞானவேலுடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
வேட்டையன் படம்: வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அனிருத் இசையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து டிரெண்டிங்கில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் சூழலில் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
ரஜினியுடன் இணைய ஆசை: இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் வாழை என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ள மாரி செல்வராஜிடம் பேசிய செய்தியாளர்கள், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைவாரா என்று கேள்வி எழுப்பினர். அப்போது தன்னுடைய கர்ணன், வாழை என அடுத்தடுத்த படங்களை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் அவருடன் இணைந்து படம் செய்ய தனக்கும் ஆசை உள்ளதாகவும் ரஜினிக்கும் தன்னுடன் இணைய ஆசையுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
பைசன் படத்தின் சூட்டிங்: தற்போது நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்துவரும் பைசன் படத்தை இயக்கிவருகிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இடையில் வாழை படத்தின் ரிலீசுக்காக இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாகவும் இன்னும் 25 நாட்களின் சூட்டிங் மீதமுள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்த நிலையில், இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இதேபோன்ற கதைக்களத்தில் ரஜினியை இவர் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











