Mari Selvaraj: பிடிக்காமல் தான் தாலி கட்டினேன்.. மாரி செல்வராஜ் சொன்ன திருமண சீக்ரெட்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் மாரி செல்வராஜ், தனது திருமணம் காதல் திருமணமாக இருந்த போதும், அவரின் கழுத்தில் விருப்பம் இல்லாமல் தான் தாலியை கட்டினேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராமிடம் துணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்த வெற்றிப்படத்தை கொடுத்த மாரி செல்வராஜ், தனது வாழ்க்கை திரைப்படமான வாழை படத்தை இயக்கினார்.

mari selvaraj divya mari selvaraj marriage

மாரி செல்வராஜ்: இப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. உணர்வுபூர்வமான இப்படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக புகழ்ந்து பாராட்டினார்கள்.

புதிதாக வாழவில்லை : இந்த படம் குறித்து, பேசிய மாரி செல்வராஜ், எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். நான் இன்னமும் பழைய நினைவுகளின் ஞாபகத்தில் தான் இருக்கிறேன், நான் இன்னும் புதியதாக வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்றால், அது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான், அதுதான் என்னுடைய புதிய வாழ்க்கை.

பிடிக்காமல் கட்டிய தாலி: தொடர்ந்து பல விஷயம் குறித்து பேசிய மாரி செல்வராஜ் தன்னுடைய திருமண சீக்கெரட் குறித்து கூறியுள்ளார். அதில், நானும் என் மனைவியும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் என் மனைவியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. பின், அது சரியாகி, இருவீட்டு பெற்றோர்களும் பேசினார்கள். ஆனால், என் மனைவியின் அம்மா, தாலிக்கட்டித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்கள். ஆனால், தாலி கட்டி திருமணம் செய்து கொள்வதில் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதனால், விருப்பமே இல்லாமல் தான் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். அதே போல என் மனைவிக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு பெண்ணை காதலிக்கிறோம் என்றால், அந்த பெண்னை எப்படி திருமணம் செய்து கொண்டால் என்ன? என்பதுதான் என்னுடைய எண்ணம்.

திவ்யாவை பிடிக்க காரணம்: திவ்யாவை திருமணம் செய்து கொள்ள முதல் முக்கிய காரணம், அவரும், அவரது அப்பா, அம்மா என அனைவருமே கலையை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். கலையை நம்பினார்கள் என்று மாரி செல்வராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ், திவ்யா இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவருடைய முதல் மகள் 2018 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், மகன் 2021 ஆம் ஆண்டு பிறந்தார். யுவான்சுவாங், நாஸ்தன்கா என தனது குழந்தைக்கு இயக்குநர் ராம் பெயர் வைத்ததாக பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X