ஹீரோ இல்லனா என்ன சூரி இருக்காரு.. மாமன் இசைவெளியீட்டு விழாவில்..மாரி செல்வராஜ் பேச்சு!
சென்னை: விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்'. இப்படம் மே 16-ம் தேதி வெளியாகிறது. இதன் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். இதில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய மாரி செல்வராஜ், எனக்கும் சூரி அண்ணனுக்கும் எமோஷனலான ஒரு கான்டக்ட் இருக்கிறது. இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தது போல ஒரு உணர்வு. பல இரவுகள் அவருடன் நான் பயணித்து இருக்கிறேன். சூரியின் உடல் மொழி, அவர் கதை கேட்கும் திறமை இதையெல்லாம் பார்த்து அவர் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று நான் பல முறை யோசித்து இருக்கிறேன்.
வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்க கூடிய, இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக ஆவார்கள் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். நான் கதை எழுதிய போது, சாதாரணமான ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து இருக்கிறேன்.

சூரி நடிப்பார்: ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது, நாம் ஒருவர் பெயரைச் சொல்லி இவர் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், அந்த கதை டம்மி ஆகிவிடும். அப்படி இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கி இன்று சூரிய கதாநாயகனாக மாறி இருக்கிறார். இதை நினைக்கும் போதே மனதிற்குள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு எனர்ஜி வந்தது போல நான் உணர்கிறேன். யாருமே நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு கதையை எடுத்துக்கொண்டு சூரியிடம் சென்றால் நிச்சயமாக அவர் நடித்துக் கொடுப்பார் என்கின்ற நம்பிக்கை பலருக்கு வந்திருக்கிறது. இன்னும் சூரி அடுத்தடுத்து பல திரைப்படங்களை நடிக்க வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
நல்ல கதை: தொடர்ந்து பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த திரைப்படத்தில் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன், விலங்கு வெப் தொடர் வெளியீட்டுவிழாவில் நான் ஒரு பிளாக் டைரக்டர், விமல் ஒரு பிளாக் நடிகர் இருவரும் சேர்ந்து ஒரு வெப் சீரிஸை எடுத்து இருக்கிறோம், அதை பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றார். அதன்பின், ஒருவர் இந்த விலங்கு வெப் தொடர்பு பற்றி என்னிடம் கூறினார். நான் மாமன்னன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தினமும் இரவில் இந்த தொடரைப் பார்த்தேன். உண்மையில் ஒவ்வொரு எபிசோடிலும் திருப்புங்கள் இருந்தது அதை பார்த்து நான் வியந்து போனேன், அதில் நான் யூகிக்க முடியாத பல விஷயங்கள் இருந்தது. இப்படிப்பட்ட ஒருவர் தற்போது மாமன் படத்தை இயக்கி இருக்கிறார் என்று மாரி செல்வராஜ் அந்த விழாவில் பேசினார்.
மாமன் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. தன் அக்கா ஸ்வாசிகாவின் மகன் மீது மிகுந்த பாசமாக இருக்கிறார் மாமன் சூரி. குழந்தை பிறந்து வளர்ந்து சிறுவனான பிறகும் கூட பாசமழை பொழிகிறான் சூரி. ஆனால், குடும்பத்தில் வரும் சிக்கலால் அக்கா மகனை பிரியும் சூழ்நிலை வருகிறது. அப்போது அக்கா மகனை எப்படி சூரி அரவணைக்கிறார் என்பது தான் மாமன் படத்தின் கதை.


Click it and Unblock the Notifications











