50 ஆண்களுக்கு முன் பெண்ணை ஆட வைப்பதா? விளாசிய மாரி செல்வராஜ்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இத்திரைப்படம் குறித்து பல பேட்டிகளில் பேசி வரும் மாரி செல்வராஜ், வாழை படம் குறித்தும் சினிமா குறித்தும் பல விஷயத்தை பேசி உள்ளார்.

1999-ம் ஆண்டு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம் என்ற இடத்தில் வயலில் கவிழ்ந்தது. இதில் 20 தொழிலாளிகள் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருந்தார் மாரி செல்வராஜ். கடந்த மாதம் 23ம் தேதி வெளியாகி இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

mari selvaraj vaazhai goat

வாழை: இந்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் ஆகியோர் உணர்வுபூர்வமாக நடித்திருந்தனர். மேலும், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், ஜானகி என மற்றும் பலர் நடித்துள்ளனர். 'வாழை' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பாலா, தனுஷ், மணிரத்னம், பாரதி ராஜா, விஜய் சேதுபதி, சூரி என பலரும் பாராட்டி இருந்தனர்.

மாரி செல்வராஜ் பேட்டி: இந்த படம் குறித்து, யூடியூபில் பேசிய மாரி செல்வராஜ், வாழை படம் குறித்து பல விஷயத்தை பேசினார். அதில், எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். எனக்கு இன்னமும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் இருக்கிறது. புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை என்றார்.

ஒரு பெண்ணை ஆட வைப்பதா: அதைத்தொடர்ந்து பேசிய அவர், வாழை படத்தில் பழைய பாடலான மஞ்சள் பூசும், தூதுவளைய அரைச்சி என்ற பாடல் வைத்தது குறித்து பேசியபோது, அந்த பாடல்களை என்னால் மறக்கவே முடியாது என்றார். மேலும், பாடல் என்றால் ஒரு ஆண், ஒரு பெண் சேர்ந்து ஆடுவது அது காதல் பாடல், இல்லை ஒரு குரூப் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து ஆடினால் அது கொண்டாட்டம். ஆனால், 50 ஆண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மனநிலை, இது அந்த பெண்ணை ஒரு போதை போல இந்த தமிழ் சினிமா காட்டுவது எவ்வளவு கொடுமை என்று பேசியிருந்தார்.

மட்ட பாடல்: அவர் பேசியதை, தற்போது, கோட் படத்தில் பல ஆண்களுக்கு, மத்தியில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியிருக்கிறார். இதுவரை எந்த படத்திற்கும் த்ரிஷா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியது இல்லை. இந்த படத்தில் அவருக்கும், விஜய்க்கும் இருக்கும் நட்பின் காரணமாக ஆடி இருந்தார். இந்த படத்தில திரிஷா நடனம் ஆடியதையும் மாரி செல்வராஜ் பேசியதையும் இணையவாசிகள் ஒன்றாக பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த படம்: வாழை படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து தனது ஐந்தாவது படைப்பான "பைசன்" என்கின்ற திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X