பெரியார் ஏன் இப்படி பேசுனார்னு நெனச்சேன்.. மேடையில் அதிரடியாக பேசிய மாரிசெல்வராஜ்!
சென்னை: தீவுத்திடலில் பெரியார் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் சேர்த்து 2026ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது வழங்கப்பட்டது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தால் நடித்தப்பட்ட இந்த விழாவில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பெரியார் குறித்து பல விஷயத்தை பேசினார்.
அதில் பேசிய செல்வராஜ், அம்பேத்கர் என் வாழ்க்கையில் இயல்பாகவே, வாழ்வோடு ஒன்றிப்போன ஒருவராகவும், ஆற்றலாகவும் மாறிவிட்டார். ஆனால், பெரியார் எனக்கு தொலைதூர பொருளாகவே இருந்தார். எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியது என் துணைவியார் தான். ஏனென்றால், அவர் பெரியாரிஸ்டாக இருந்தார். அதனால் தான் அவருடன் சேர்ந்து விருதை வாங்கினேன். எப்படி நாங்கள் இருவரும் சேர்ந்தோம் என்றால், நான் 'காட்சி' என்கிற வலைத்தளத்தில் என் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை எழுதினேன். அதைப்படித்துவிட்டு என்னிடம் பேசினார். அப்போது தான், அவர் பெரியாரைப்பற்றி பல விஷயத்தை என்னிடம் பகர்ந்தார். அதன்பின் பெரியாரை பற்றி நான் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன், அவரை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மாரிசெல்வராஜ்: நாங்கள் இருவரும் சாதி மறுப்பது திருமணம் செய்து கொண்டோம், அவருடைய வீட்டிற்கு எந்தவித தங்கும் தடையும் இல்லாமல் நான் சென்றேன். அனைவருக்குமே மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், எப்படி உன்னை உள்ளே விட்டார்கள், எப்படி உனக்கு பெண் கொடுத்தார்கள் என கேட்டார்கள். ஏனென்றால், அந்த வீட்டிற்குள் பெரியார் இருந்தார். திவ்யாவை நான் பெண் கேட்க சென்ற போது, இது சரியா வருமா, என்ன நடக்குமோ என்ற பயத்தோடு தான் சென்றேன். ஆனால், அறையில் பெரியார் போட்டோவை பார்த்த பிறகு தான் நிம்மதி அடைந்தேன். அதன் பிறகு திருமணத்திற்கு வந்த எல்லா எதிர்ப்புகளையும் அவரின் அம்மாவே சமாளித்தார்.
என் பெரியார் இப்படி பேசுகிறார்: அதன் பிறகு பெரியாரை பற்றி இன்னும் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். பெரியாரை புரிந்து கொள்வது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. பெரியாரைப் பற்றிய படிக்க படிக்க அதற்குள் ஒரு ஆத்திரம் இருக்கும், சில நேரங்களில் ஏன் இவர் இப்படி பேசுகிறார் என தோன்றும், சில நேரங்களில் நம்மை பாதுகாக்கும் உணர்வு இருக்கும். சில நேரம் சுதந்திரத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அவரின் பேச்சு இருக்கும். நான் இப்போது பெரியாரைப் பற்றி படித்து வைத்து ஏதாவது பேசுகிறேன் என்றால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பாக பேசுவேன். பெரியாரை எதிர்த்தே நான் பிரபலமாக முடியும். நன்றாக பேசக் கற்றுக்கொள்ள முடியும். மிகப் பெரிய தெம்பு வந்து விடும். என்னுடைய பேச்சுக்கு பாராட்டு கிடைத்து அந்த தெம்பும், திராணியும் என்ன செய்யும் என்றால், நாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டோமோ, அவர்களைப் பற்றி பேசும்போதுதான் நாம் பெரிய ஆளாக முடியும் என்று மாரி செல்வராஜ் பேசினார்


Click it and Unblock the Notifications











