வாழை படத்திற்காக எவ்ளோ உழைச்சிருக்காரு.. கேரக்டராக மாறிய மாரி செல்வராஜ்.. சூட்டிங் ஸ்பாட் வீடியோ!
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழை படம் வெளியாகி உள்ளது.
வாழை படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. படத்தின் கதைக்களம் மட்டுமில்லாமல் காட்சி அமைப்புகளும் ரசிகர்களுக்கு விருந்தாகி உள்ளன. படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி படமாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது இந்நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் எந்த அளவிற்கு மெனக்கெட்டு உள்ளார் என்பதாக ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ்: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக தன்னுடைய வாழை படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடந்த வாரத்தில் வெளியாகி உள்ள வாழை படத்தின் அழுத்தமான கதைக்களம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தூத்துக்குடி மக்களின் சொல்லப்படாத பக்கங்களை இந்த படம் தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் சிறுவர்கள் இணைந்து கேரக்டர்களாகவே வாழ்ந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த வாழை படம்: 10 கிலோவுக்கு மேல் இருக்கும் வாழைத்தார்களை சுமந்து சுமந்து தன்னுடைய தோள்பட்டையில் வலி ஏற்பட்டதாகவும் அது சரியாக பல மாதங்கள் பிடித்ததாகவும் நடிகை திவ்யா துரைசாமி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்தில் அவரும் கலையரசனும் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளனர். அவர்களின் அழகான காதல் இந்த படத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதே போல கிளைமாக்ஸ் காட்சிகளில் கண்ணீர் விடாமல் வெளியில் வரும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
சூட்டிங் ஸ்பாட் வீடியோ: தான் எதிர்பார்க்கும் அவுட்புட் வரும்வரையில் தங்களை விடமாட்டார் என்றும் திவ்யா துரைசாமி முன்னதாக மாரி செல்வராஜ் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது வாழை படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் சிறுவர்களாக நடித்துள்ள ராகுல் உள்ளிட்டவர்களும் தங்களது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நிலையில் வாழை தோப்பிற்கு இடையில் சிறுவர்கள் ஓடிவரும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த காட்சி மிகவும் பர்ஃபெக்ட்டாக வரும் வகையில் அவரும் இந்த காட்சியில் நடித்து அதே போல வாழை மரங்களுக்கு இடையில் இடறி விழுவதாக இந்த காட்சியில் காணப்பட்டுள்ளது.
அதிகமாக மெனக்கெட்ட மாரி செல்வராஜ்: வாழை மரங்களுக்கிடையில் ஓடிவந்து இடறி விழுந்து சலனமே இல்லாமல் விழுந்து கிடக்கும் காட்சியையும் அவர் தத்ரூபமாக நடித்து காட்டியுள்ளார். மேலும் தலையில் வாழைத்தார்களை அவரும் சுமந்து செல்கிறார். இது படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை மீண்டும் காண்பது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவர்களிடம் சரியான அளவில் வேலை வாங்கும் வகையில் மாரி செல்வராஜ் எப்படி எல்லாம் செயல்பட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ மூலம் வெளிப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











