உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள வாழை படம்.. வெளியானது மிரட்டலான ட்ரெயிலர்!

சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சூப்புராஜ் வாழை பட ட்ரெயிலரை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளம் வயதில் தான் சந்தித்த ஜாதிய பாகுபாடுகளை மையமாக வைத்து இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் வாழை படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Mari Selvaraj Vaazhai movie

இயக்குநர் மாரி செல்வராஜ்: தமிழில் கவனத்தைப் பெற்று அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அவரது இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக வெளியான இந்த படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த படம் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தப் படத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வடிவேலு என்ற குணச்சித்திர நடிகர் மீண்டும் வெளிப்பட்டார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் உருவாகியுள்ளது.

உணர்ச்சிப்பூர்வ கதைக்களம்: உணர்ச்சி பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள வாழை படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் இயக்குனர்களில் மாரி செல்வராஜும் தொடர்ந்து கவனத்தை பெற்று வருகிறார். அந்த வகையில் வாழை படத்தில் சிறுவர்களை மையமாக வைத்து அவர் படத்தை இயக்கியுள்ளார். பொன்வேல் மற்றும் ராகுல் என இரு சிறுவர்கள் வாழை படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் தயாரிப்பு: இதேபோல கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது வாழை படம். இந்த படத்திற்கு சந்தேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பிராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து வாழை படத்தை தயாரித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ய உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள்: சிறுவயதில் தான் எதிர்கொண்ட சாதிய ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார். மாரி செல்வராஜ் தன்னுடைய முந்தையப் படங்களில் அதிகமாக பயன்படுத்தியிருந்த நாட்டார் தெய்வங்கள், விலங்குகளை இந்த ட்ரெயிலரில் பார்க்க முடிகிறது. முந்தைய படங்களை போலவே இந்தப் படத்திலும் சிறப்பான கதைக்களத்துடன் மாரி செல்வராஜ் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X