மாரி செல்வராஜின் வாழை படம் எப்படி இருக்கு… ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில், கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படம் குறித்த ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்துள்ளது. இப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும்.

மாரி செல்வராஜின் வாழை: படம் வெளியாவதற்கு முன்பே சிறப்பு காட்சி மூலம் படம் பார்த்த இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்டோர், வாழை திரைப்படம் மாரி செல்வராஜுக்கு நிச்சயம் பல விருதுகளை பெற்றுத்தரும் என்றனர். மேலும் படத்தை பார்த்த இயக்குநர் பாலா, கண்கலங்கியபடி வந்து, மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து, சில நிமிடங்கள் மாரியின் கைகளை பற்றியபடி பேச முடியாத நிலையில் இருந்தார்.
வாழையடி வாழையாய்: விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தளபக்கத்தில், மாரி செல்வராஜ், உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai -ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்ட் 23ந் தேதி கார்த்திருக்கிறேன் என பகிர்ந்து இருந்தார்.
தமிழ் சினிமாவின் சிறந்த படம்: இன்று படம் வெளியாகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர் ஒருவர், மாரி செல்வராஜின் ஒரு அற்புதமான திரைப்படம் வாழை. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று இந்த படம். இயக்குனரின் அறிவுத்திறன் மிக்க கைவினைத்திறன் மூலம் மிகச்சிறப்பான இயக்கத்துடன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நம் அன்றாட வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருக்கும் முகங்களுடன் ஆழமாக மூழ்கும் அழகான திரைப்படம் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஃபீல் குட்: படம் பார்த்த மற்றொரு ரசிகர் வாழை படத்தின் முதல் பாதி ஃபீல் குட் என்றும் இரண்டாம் பாதியில் மாரிசெல்வராஜின் அருமையான முயற்சி தெரிகிறது. மேலும், நிகிலாவிமல் மற்றும் சிவனாய்ந்தா கேரக்டரில் நடித்த சிறுவனின் சூப்பர். இடைவேளை, க்ளைமாக்ஸ் மனதைத் தொடும் வகையில் இருந்தது. படத்தில் வரும் இரண்டு பாடல்களும் மற்றும் BMS நன்றாக உள்ளது. மாரிசெல்வராஜ் படத்தை சீரான இடைவெளியில் இயக்கி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக வாழை ஒரு நல்ல படம் என்று படத்திற்கு 5க்கு 4.25 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











