Double tuckerr movie: டேய் என் பாடி எங்கடா.. வெளியானது டபுள் டக்கர் படத்தின் சூப்பர் கூல் டீசர்!

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி படங்களின் எண்ணிக்கை குறைவாகியுள்ளது. தற்போதெல்லாம் அடிதடி, சண்டை காட்சிகளை அதிகமாகக் கொண்ட படங்கள் அதிகமாக ரிலீசாகி வருகின்றன. ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படங்கள் மிகச்சிறந்த என்டர்டைன்மென்ட்டை கொடுத்து வருகின்றன. இந்த படங்களின் ஊடாகவே காமெடி டிராக்குகளும் அமைந்து வருகின்றன. இந்நிலையில் காமெடி படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஒரு சில படங்கள் இந்த டிராக்கை மையமாக வைத்து வெளியிடப்பட்டாலும் அவை அதிக கவனத்தை பெறாமல் அல்லது அதிகமாக பிரமோஷன் செய்யப்படாமல் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கவனத்திற்கு வராமலே சென்று விடுகிறது. இந்த குறையை போக்கும் வகையில் ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக மீரா மஹதி இயக்கத்தில் பேன்டசி காமெடி தளத்தில் உருவாகியுள்ளது டபுள் தக்கர் படம். இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

Director Meera mahadhis Double tuckerr movie teaser released

டபுள் டக்கர் படம்: தமிழில் காமெடி படங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர். இந்த குறையை போக்கும் வகையில் அடுத்ததாக ஃபேன்டஸி காமெடி படமாக உருவாகியுள்ளது டபுள் டக்கர். இந்த படத்தில் தீரஜ் நாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனீஸ்காந்த், சுனில் ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கௌதம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரிலீசுக்கு தயார்: Air flick productions நிறுவனத் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. மீரா மஹதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் அனிமேஷன் கேரக்டர்களில் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அயலான் படத்தை போலவே இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

அனிமேஷன் கேரக்டர்கள்: கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். இதனிடையே இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டீசரில் எப்படி கதாநாயகனின் உயிர் தவறாக பறிக்கப்படுவதாகவும் அதற்கு காரணமான அந்த அனிமேஷன் கேரக்டர்களை அவர் வைத்து செய்வதாகவும் கதைக்களம் அமைந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவருடைய உடல் காணாமல் போவதாகவும் டேய் என்னோட பாடி எங்கடா என்று அவர் கேட்பதாகவும் அமைந்துள்ளது. படத்தில் கோவை சரளா, காளி வெங்கட், முனீஸ்காந்த் என காமெடி கேரக்டர்கள் அதிகமாக உள்ள நிலையில் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் காமெடி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

பேன்டசி படம் : டபுள் டக்கர் படம் பேன்டஸி அம்சங்களுடன் வயிறு வலிக்க சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தில் வித்யாசாகரின் இசை மிகுந்த கவனத்தை பெறும் என்று படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர், மெல்லிசை மற்றும் இளமை துள்ளல்களின் சரியான கலவையாக இந்த படத்தின் பாடல்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் லிரிக் வீடியோ பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X