தமிழ்நாட்ட அவன்கிட்டேயிருந்து காப்பாத்தனும்.. விஷாலை ஒருமையில் பேசி கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்!

சென்னை: நடிகர் விஷாலை இயக்குநர் மிஷ்கின் ஒருமையில் விளாசிய சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

டேய் தம்பி Vishalலு | Mysskin Angry Speech | Thupparivalan 2

நடிகர் விஷாலுக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக். நடிகர் விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கினார் மிஷ்கின். இதனையும் விஷாலின் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தான் தயாரித்தது.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

லண்டனில் பிரமாண்டமாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தில் இருந்து விலகினார் இயக்குநர் மிஷ்கின். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் என சில டாக்குமென்ட் போட்டோக்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரையாகி விடாதீர்கள்

இரையாகி விடாதீர்கள்

இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கப் போவதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை மேலும் கூட்டினார். அதோடு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் அநாதையாக விட்டுச் சென்றுவிட்டார் என பெயரை குறிப்பிடாமல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும் தேவையற்ற செலவுகளை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்படுத்தியதாக தெரிவித்த நடிகர் விஷால், தயாரிப்பாளர்கள் யாரும் அவருக்கு இரையாகி விடக் கூடாது என்றார்.

நிரூப்பிக்கனும்

நிரூப்பிக்கனும்

முன்னணி இயக்குநர் விஷாலின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இந்நிலையில் 'கண்ணாமூச்சி' வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட பேசிய இயக்குனர் மிஷ்கின், "துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக தனக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து ஆவேசமாக பேசினார். விஷால் குறிப்பிட்டது போல் நான் 35 லட்சம் ரூபாய் செலவு செய்ததற்கான ஆதாரத்தை கொடுத்து நிரூபிக்க வேண்டும் என்றார்.

கொடுக்காமல் இருந்திருந்தால்?

கொடுக்காமல் இருந்திருந்தால்?

மேலும் விஷாலை ஒருமையிலும் பேசி பிரளயத்தை கிளப்பினார். 'என் தம்பி என்று நினைத்த அவன் என் தாயை வேசி என கேவலமாக திட்டினான். அவன் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. நான் என்ஓசி கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குனர் சங்கத்திற்கோ சென்றிருந்தால் இன்று படத்தின் ஃபஸ்ட் லுக்போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா?.

பார்த்துக்கொள்ள வேண்டும்

பார்த்துக்கொள்ள வேண்டும்

உன் வாழ்க்கை சொல்லும், உன் தாய், தந்தை, தங்கை சொல்வார்கள் நான் எப்படி பழகியிருக்கிறேன் என்று. ரமணாவும், நந்தாவும் உன்னை ரோட்டில் கொண்டு இறக்கி விடுவார்கள் என்று நான் சொன்னது சத்திய வாக்காகிவிட்டது. இந்த படம் நின்றதற்கு காரணமும் அவர்கள்தான். இனி விடமாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருத்தர்தான் அவனை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவனிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூங்கவே மாட்ட

தூங்கவே மாட்ட

அவனுக்காக என் தம்பியை நான் அடித்தேன். என் தாயை கேவலமாக பேசியதற்காக என் தம்பி கோபப்பட்டான். மூன்று வருடம் அவனை அண்ணன் என்ற அழைத்திருக்கிறாய் அதனால் விடு போகட்டும் என்று என் தம்பியை சமாதானப் படுத்தினேன். விஷால் உன் வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இது தான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய்.

கிழித்து தொங்கவிட்டு

கிழித்து தொங்கவிட்டு

உன் தரப்பில் தர்மம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்' இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் ஆவேசமாக பேசினார். அதோடு நடிகர் விஷாலை பொறுக்கி பொறுக்கி என்று பல முறை கூறி விழாவில் பங்கேற்றவர்களையும் மிரள செய்தார் இயக்குநர் மிஷ்கின். கண்ணா மூச்சி வெப்சீரிஸ் விழாவை தனது தரப்பு நியாயத்தை சொல்லும் மேடையாக பயன்படுத்தி விஷாலை கிழித்து தொங்கவிட்டார் மிஷ்கின்.

மிஷ்கினுடனும் பகை

மிஷ்கினுடனும் பகை

ஏற்கனவே நடிகர் விஷாலுக்கு தமிழ் சினிமாவில் எதிர்ப்புகள் அதிகம். அண்டை மாநிலத்தை சேர்ந்த விஷால் தமிழ் சினிமாவை ஆள நினைப்பது தவறு என நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து தரப்பில் இருந்தும் அவருக்கு எதிர்ப்பு அலையே இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினையும் பகைத்து கொண்டுள்ளார் நடிகர் விஷால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X