நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு!
தான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால், மம்மூட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால், மம்மூட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பேன் என இயக்குனர் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மம்மூட்டி, சித்தார்த், அஞ்சலி, ஆன்ட்ரியா, இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலா, கே.எஸ்.ரவிகும ர், ஏ.எல்.விஜய் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மம்மூட்டியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். ஒருபடி மேலே சென்று, 'தான் ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன்' என்று கூறினார்.

சிறந்த படைப்பு:
இதுதொடர்பாக விழாவில் அவர் பேசியதாவது, "ராம் இயக்கியுள்ள பேரன்பு படம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்பு. இந்த படத்தை சூரிய வெளிச்சத்தில் அமர்ந்து பார்க்கலாம். ஏனென்றால், இருட்டில் பார்க்க வேண்டிய படங்கள் பல இருக்கின்றன.

வெற்றி நிச்சயம்:
சிறுவயதில் நான் படித்த செக்ஸ் புக்கின் பெயர் தான் இருட்டு அறையில் முரட்டு குத்துக்கள். அந்த தலைப்பை தயாரிப்பாளர் ஒருவர் சில ஆண டுகளுக்கு முன் என்னிடம் சொன்னார். அப்போதே அவர் கணித்தார் அந்த படம் 15 கோடி வசூலிக்கும் என்று. தற்போது அது நிரூபணமானது. அதேபோல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ராம் என்னிடம் வந்து பேரன்பு தலைப்பை சொன்னபோதே, அதன் வெற்றி நிச்சயமாகிவிட்டது.

உதாரணம்:
இந்த படம் ஒரு சிறந்த பாடம். இதற்கு முன்னர் எனது உதவி இயக்குனர்களிடம் நான் பார்க்க சொல்லும் படம் செவன் சாமுராய். னால் இப்போது பேரன்பையும் பார்க்க சொல்வேன். எல்லோர் வீட்டிலும் டி.வி.டி.யாக வைத்திருக்க வேண்டிய படம் பேரன்பு.

பாராட்டு:
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனர்களுக்கெல்லாம் குருவாகிவிட்டான் ராம். தேனப்பன் இதுவரை தயாரித்த படங்கள் எல்லாம் படங்களே இல்லை. பேரன்பு தான் அவர் தயாரித்த முதல் படம்.

சர்ச்சைப் பேச்சு:
இந்த படத்தில் மிக சிறந்த கலைஞனான மம்மூட்டி நடித்திருக்கிறார். நம்ம நடிகர்கள் யாராவது இந்த படத்தில் நடித்திருந்தால், அவ்வளவு தான். அப்படியே நடித்திருப்பார்கள் (நக்கலாக குறிப்பிடுகிறார்). ஆனால் மம்மூட்டி வெளிப்படுத்திய உணர்வுகள் அவ்வளவு அற்புதமானது. நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை காதலித்திருப்பேன், இல்லை அவரை ரேப் செய்திருப்பேன்," என இயக்குனர் மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
பாஸு.. இதெல்லாம் ரெம்ப ஓவரு பாஸு.. பாத்துப் பேசுங்க!
பாஸு.. இதெல்லாம் ரெம்ப ஓவரு பாஸு.. பாத்துப் பேசுங்க!


Click it and Unblock the Notifications











