twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. கமல்ஹாசனுக்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்!

    |

    சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வரிசையாய் பெரிய தலைகள் எல்லாம் விலகி வரும் நிலையில் கமல் சினிமாவை மட்டுமே பார்க்கலாம் என பிரபல இயக்குநர் அறிவுரை கூறியுள்ளார்.

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார்.

    டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று...மருத்துவமனையில் அனுமதி டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று...மருத்துவமனையில் அனுமதி

    இதேபோல் சுற்றுச்சூழல் பிரிவு மாநில பொறுப்பாளர் பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சந்தோஷ் பாபு, பத்மபிரியா

    சந்தோஷ் பாபு, பத்மபிரியா

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜகே கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் சந்தோஷ் பாபு வேளச்சேரி தொகுதியிலும் பத்மபிரியா மதுரவாயில் தொகுதியிலும் போட்டியிட்டனர்.

    தோற்ற கமல்

    தோற்ற கமல்

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் தோற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த ஒருவரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

    தலைவர்கள் விலகல்

    தலைவர்கள் விலகல்

    இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த தலைவர்களான மகேந்திரன், பொன்ராஜ் விலகலை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் இன்று விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மோகன் ஜி அட்வைஸ்

    மோகன் ஜி அட்வைஸ்

    இந்நிலையில் கமல்ஹாசன் சினிமாவை மட்டுமே தொடரலாம் என பிரபல இயக்குநரான மோகன் ஜி அட்வைஸ் கூறி டிவிட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், கமல் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள்.

    அரசியலை தூக்கி எறியுங்கள்

    அரசியலை தூக்கி எறியுங்கள்

    கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை.. என குறிப்பிட்டுள்ளார்.

    திரௌபதி படம்

    திரௌபதி படம்

    இயக்குநர் மோகன் ஜி வண்ணாரப் பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Mohan G advising Kamal hassan to follow Cinema. He says Kamal is the history of Cinema, politics will not set to him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X