இவரை தொடுபவர்கள் கெடுவார்கள்.. நாம் பார்க்கதான் போகிறோம்.. ஜோவை மீண்டும் எச்சரிக்கும் இயக்குநர்!
சென்னை: தஞ்சை பெரிய கோவிலை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை ஜோதிகாவை மீண்டும் எச்சரித்திருக்கிறார் பிரபல இயக்குநர்.
Recommended Video
சோழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக விளங்கும் பல கோவில்களில் முக்கியமானது தஞ்சை பெருவுடையார் கோவில். ஆசியாவில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்று என்ற பெருமைக்கும் உரியது.
மன்னர் ராஜ ராஜ சோழன் கட்டிய இந்த பெருவுடையார் கோவில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

அதிக விமர்சனம்
இந்நிலையில் இந்தக் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் நடிகை ஜோதிகா. இதனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். திரைத்துறையினர் அரசியல் தலைவர்கள் என பலரும் ஜோதிகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் கண்டனம்
அதேநேரத்தில் ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை என மகாகவி பாரதியாருடன் ஒப்பிட்டு சிலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் திரௌபதி இயக்குநர் மோகன் ஜி, ஜோதிகாவின் பேச்சுக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொட்டால் கெடுவார்கள்
அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. என ஜோதிகாவை மறைமுகமாக எச்சரித்திருந்தார்.

மறுப்பு தெரிவிக்கப்படவில்லை
நடிகர் எஸ்வி சேகர், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் நடிகை ஜோதிகாவின் பேச்சு தவறானது என்று கூறியுள்ளனர். இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியபோதும் ஜோதிகா தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது.

பார்க்கதான் போகிறோம்
இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் மீண்டும் ஆணித்தரமாக சொல்கிறேன். இவரை தொடுபவர்கள் கெட்டு போவார்கள்.. நாம் பார்க்க தான் போகிறோம்.. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.. என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் உணரும்
அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோகனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ஒப்பீடு செய்வதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.ஆனால் தஞ்சையை தொட்டு விட்டார் .நாம் அறிவோம் தஞ்சைப் பெருவுடையார் அருமையும் ஆக்கமும் !சிவகுமார் குடும்பம் விரைவில் உணரும்! ஈசனின் ஆட்டம் புரியும் இனி அவர்களுக்கு.. என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











