Draupathi 2: விளக்கம் கொடுங்க சின்மயி.. மோகன் ஜி கேள்வியால் சூடுபிடிக்கும் திரௌபதி 2 பாடல் விவகாரம்

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி 2. நடிகர் ரிச்செர்ட் ரிஷி நடிகை ரக்‌ஷனா இந்துசூடன், நட்டி நடராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முதல் பாடலாக, " எம்கோனே" பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பாடலை சின்மயி பாடியிருந்தார். பாடல் வெளியான பின்னர், மோகன் ஜி படத்தில் ஏன் பாடினீர்கள் என்று எக்ஸ் பக்கத்தில் கேள்விகள் எழ, அதன் பின்னர் நடந்ததுதான் பஞ்சாயத்து. அந்த பஞ்சாயத்துக்கு தான் இயக்குநர் மோகன் ஜி விளக்கம் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

எம்கோனே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்றாலும், பாடல் வெளியான சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே, பலரும் பாடலைப் பாடிய பாடகி சின்மயியை நோக்கி கேள்வி எழுப்பினர். அதாவது, " மோகன் ஜி, பெண்களுக்கு எதிராக, பெண் சுதந்திரத்திற்கு எதிராக முற்போக்குக்கு எதிராக படம் எடுக்க கூடியவர். பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் சின்மயி எப்படி மோகன் ஜி இயக்கத்தில் வரும் படத்தில் பாடல் பாடினார் என்ற கேள்வியை பலரும் கேட்டனர்.

இந்த எதிர்வினையை எதிர்பார்க்காத பாடகி சின்மயி, தனது எக்ஸ் பக்கத்தில், நான் இந்த பாடலைப் பாடும்போது இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஸ்டூடியோவில் இல்லை. ஜிப்ரானை எனக்கு 18 ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் அவர்களின் கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இந்த பாடலை பாடியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.

Director Mohan G Asking Clarification To Singer Chinmayi Reaction After EmKoney Song Release
Photo Credit:

அதன் பின்னர் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சலசலப்புகள் ஏற்பட்டது. இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில், " இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே! பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கி விடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் மோகன் ஜி வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

மோகன் ஜி: இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், " நான் சின்மயி அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவன். இந்த பாடலை அவர் பாடினால், பாடலுக்கு உயிர் கொடுத்தது போல இருக்கும் என்று நான் தான் ஆசைப்பட்டேன். அவர் பாடலைப் பாடும்போது நானும் ரெக்கார்டிங் தியேட்டரில் இல்லை. பாடல் வெளியான பின்னர் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதும், சின்மயி அவர்கள் கட்டாயம் ரியாக்ட் செய்வார்கள் என்று நினைத்தேன்.

ரியாக்‌ஷன்: ஆனால் அவர்களின் ரியாக்‌ஷன் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் ரியாக்ட் செய்வதற்கு முன்னர், இந்த படத்தின் கதை என்ன? இந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று எங்களிடத்தில் விளக்கம் கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், நாங்கள் கொடுத்திருப்போம். அப்படி இருக்கும்போது அவர்களாகவே வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளரும் சின்மயி அவர்களின் ரியாக்‌ஷன் படத்தின் வணிகத்தை பாதிக்காதா என்று கேள்வி எழுப்புகிறார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் அதற்கு விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: mohan g draupathi 2 chinmayi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X