வாருங்கள் சகோதரா.. வந்து படத்தை பாருங்கள்.. பிரபல இயக்குநருக்கு அழைப்பு விடுத்த திரௌபதி இயக்குநர்!
சென்னை: திரௌபதி படத்தை பார்க்க இயக்குநர் பா ரஞ்சித்துக்கு அப்படத்தின் இயக்குநர் மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
திரௌபதி படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸானது. இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்துள்ளார். இப்படம் நாடகக்காதலை தோலுரித்து காட்டும் படமாக உள்ளது.

முதல் நாள் வசூல்
இப்படத்தை வண்ணாரப் பேட்டை படத்தை இயக்கிய மோகன் இயக்கியிருக்கிறார். படம் ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாட்களிலேயே 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் வசூலே அள்ளியதால் அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

தியேட்டர்களில் கூட்டம்
50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட படம் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதை பார்த்து தமிழ் சினிமா வட்டாரம் வாயை பிளந்திருக்கிறது. இந்த படத்திற்கு பல்வேறு அமைப்புகளும் பல சமூகங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பாராட்டு
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் மோகன், படத்தை பார்க்க வருமாறு இயக்குநர் பா ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இயக்குநர் பா ரஞ்சித்தை நெட்டிசன் ஒருவர் திரௌபதி படத்தை பார்க்க வாருங்கள், உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, அதனால் டிவிட்டர் மூலமாக அழைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
ரஞ்சித்துக்கு அழைப்பு
அந்த டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்த திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன், பா. ரஞ்சித்தை திரௌபதி படத்தை பார்க்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை...என பதிவிட்டுள்ளார். இயக்குநர் மோகனின் டிவிட்டை பலரும் லைக் செய்து வருவதோடு ரீடிவிட்டும் செய்து வருகின்றனர்.
அவருக்கும் ஒரு அழைப்பு
இயக்குநர் மோகனின் இந்த டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன் சகோதரனே என அழைத்தாரே இதுதான் மோகனுக்குள்ள பெருந்தன்மையான மனம்... என்று கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசனான இவர் மோகன் ஜி அப்படியே ஸ்டாலினுக்கு அழைப்பு விடுங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











