விஜய்யோட ஸ்பெஷல்.. ஆனா அஜித்கிட்ட கிடையாது.. டைரக்டர் மோகன் ஜி சொன்ன விஷயத்தை பாருங்க!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கோட் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்தப் படத்தை படத்தின் நடிகர்கள், நடிகைகள் மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களும் திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்தனர்.
இதனிடையே பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து, அடுத்தடுத்து திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மோகன் ஜியும் விஜய்யின் கோட் படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்க்க வந்திருந்தார். அவர் விஜய்யின் ஸ்பெஷல் டேலண்ட் குறித்து சிலாகித்து பேசினார்.

நடிகர் விஜய்யின் கோட் படம்: சர்வதேச அளவில் நேற்றைய தினம் திரையரங்குகளில் விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் அப்பா -மகன் என இரு வேறு கேரக்டர்களில் நடித்திருந்த விஜய்யின் நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்துள்ள போதிலும் பல படங்களின் கலவையாகவே கோட் படம் உருவாகியுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் கவனித்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் விமர்சகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
படத்தை பார்த்த பிரபலங்கள்: படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்களை வைத்து வேலை வாங்கி உள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் வில்லன் கேரக்டரில் மோகன் சரியாக பொருந்தவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்பெஷல் ஷோ மட்டுமில்லாமல் திரையரங்குகளில் FDFS-வையும் படத்தின் நடிகர்கள், நடிகைகள் மட்டுமில்லாமல் மற்ற திரையுலக பிரபலங்களும் சென்று பார்த்துள்ளனர். படம் குறித்த தங்களது எதிர்பார்ப்பையும் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் மோகன் ஜி எதிர்பார்ப்பு: நடிகர் சிவகார்த்திகேயன், திரிஷா, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் கோட் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இந்த படம் குறித்து தன்னுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் விஜய், வெங்கட்பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ இந்தப் படத்தில் தனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். மங்காத்தா படத்திலும் எந்தவிதமான ஹைப்பும் இல்லாமல் வெங்கட் பிரபு சம்பவம் செய்ததாகவும் கோட் படத்திற்கும் எந்தவிதமான ஹைப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் ஸ்பெஷல் டேலண்ட்: விஜய்யை இயக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது என்று கூறிய மோகன் ஜி, விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் பட்சத்தில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அவரை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் அஜித்தின் ரசிகர் என்று தெரிவித்துள்ள மோகன் ஜி, ஆயினும் விஜய்யின் படங்களை FDFSவில் பார்த்துவிடுவேன் என்று கூறியுள்ளார். அஜித்திடம் இல்லாத ஒன்று விஜய்யிடம் இருக்கிறது என்றால் அது பாடல் காட்சிகளில் விஜய்யின் டான்ஸ் மற்றும் அவரது எனர்ஜி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே போல விஜய்யிடம் குழந்தைகளை கவரும் பாடி லேங்க்வேஜ் உள்ளதாகவும், அஜித்திடம் அது மிஸ்ஸிங் என்றும் மோகன் ஜி கூறியுள்ளார்.
பகாசூரன் படம்: பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இயக்குனர் மோகன் ஜி, அடுத்தடுத்து திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கினார். இந்த படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்தன. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செல்வராகவன் லீட் கேரக்டரில் நடித்திருந்த பகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.


Click it and Unblock the Notifications











