இதோ பாருங்க முதல்ல புரிஞ்சுக்கங்க.. பகாசூரன் இயக்குநரின் வேண்டுகோள்

சென்னை: பகாசூரன் படத்தை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் வைத்திருக்கிறார். படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநரான மோகன் ஜி எதை பேசினாலும் சர்ச்சையாகும். அவரது பேச்சு மட்டுமின்றி அவர் எடுக்கும் படங்களும் தொடர்ந்து சர்ச்சைகளை சந்திப்பவை. குறிப்பாக அவர் இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் பட்டியலின மக்களையும், சிறுபான்மையின மதத்தினரையும் இழிவுப்படுத்துவது போல் காட்சிகள் இருந்ததாக பலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.

சமூக வலைதளங்களில் ட்ரோலாகும் மோகன் ஜி

சமூக வலைதளங்களில் ட்ரோலாகும் மோகன் ஜி

விமர்சனங்களை சந்திப்பது மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் ஆளாவார் மோகன் ஜி. சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அளித்த பேட்டியில் அவர் பேசிய விஷயங்கள், பெண்கள் கல்லூரிக்கு சென்று யாரும் அழகான படத்தை சமூக வலைதளங்களில் டிபியாக வைக்காதீர்கள். அதனால்தான் பிரச்னைகள் உருவாகின்றன என பேசியது என பல விஷயங்கள் சோஷியல் மீடியாக்களில் பெரிதாகவே ட்ரோல் செய்யப்பட்டன.

இன்று வெளியானது பகாசூரன்

இன்று வெளியானது பகாசூரன்

இப்படிப்பட்ட சூழலில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பகாசூரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. செல்வராகவன், நட்ராஜ் என்கிற நட்டி உள்ளிட்டோரின் நடிப்பில் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. மேலும் படம் பிற்போக்குத்தனமாக இருப்பதாகவும் பலரும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி படம் டெக்னிக்கல் ரீதியாகவும் ஒழுங்காக இல்லை என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

பகாசூரனில் வருவது ஏற்கனவே பார்த்ததுதான்

பகாசூரனில் வருவது ஏற்கனவே பார்த்ததுதான்

இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி படம் குறித்து பேசுகையில், "ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் என இந்த படத்தில் சொல்லப்படுகின்றன் விஷயங்கள் ஏற்கனவே செய்திகளில் பார்த்துவருவதுதன். இது மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் என்ன தீர்வு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு இயக்குநராக விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.

யாருடனும் இந்தப் படத்தை ஒப்பிடாதீர்கள்

யாருடனும் இந்தப் படத்தை ஒப்பிடாதீர்கள்

இந்தப் படத்தை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.இதேபோல்தான் திரௌபதி படத்தில் என் மேல் தவறான முத்திரை விழுந்தது. இந்தப் படத்திலும் அதுபோல் தவறாக கனெக்ட் பண்ணாமல் சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். முன்னதாக, பா.இரஞ்சித்திற்கு எதிராகத்தான் மோகன் ஜி படம் எடுக்கிறார் என ஒரு பேச்சு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X