வீட்டுக்கு வந்த 4 பெண்கள்.. மோகன் ஜிக்கு கிடைத்த ரூ.8000 கூப்பன்.. ராயபுரத்தில் என்னதான் நடக்குது!

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம் தமிழகத் தேர்தல் களத்தின் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, 'வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து சில ஊர்களில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனை இல்லத்தரசிகளுக்கு திமுக விநியோகம் செய்து வருவதாக வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், இல்லத்தரசி கூப்பன் வீட்டிற்கு வந்து இருப்பதாக இயக்குநர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மோகன் ஜி: இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தள பக்கத்தில், தனது வீட்டுக்கு ரூ.8000 கூப்பன் கொடுக்க வந்தது குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நான்கு பெண்கள் வந்தாங்க.. எங்க வாசலில் 5 குடும்பங்கள்.. 5 வீட்டிலும், ரேசன் கார்டு பெற்று கொண்டு அதை அவர்கள் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள்.

Director Mohan G Twitter
Photo Credit:

ரூ 8 ஆயிரம் கூப்பன்: குடும்ப தலைவியிடம் தான் தருவேன் என அடம்பிடித்து, கடைசியாக திமுக விற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும், வெற்றி பெற்ற மறு நாளே, எப்படி, மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், எனவே 8000 வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம் என தகவல் தந்து விட்டு கிளம்பினார்கள். இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கி இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் மோகன் ஜி 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து 'திரௌபதி' படத்தை இயக்கினார். இந்த படம் கடும் விமர்சனத்தை சந்தித்து பேசும் பொருளானது. அதன் பின், ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய படங்கள் வெளியான நிலையில் 'திரௌபதி 2' அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X