அவர் அதிசய பிறவி.. அவரை தொட்டால் கெடுவார்கள்.. ஜோதிகாவை மறைமுகமாக எச்சரிக்கும் பிரபல இயக்குநர்!

சென்னை: அவரை தொட்டால் கெடுவார்கள் என தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை ஜோதிகாவை இயக்குநர் மோகன் ஜி மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

Recommended Video

“தஞ்சை பெரிய கோவில் எதற்கு? - ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு

தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை ஜோதிகா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் பங்கேற்ற ஜோதிகா, தஞ்சை பெருவுடையார் கோவிலை குறிப்பிட்டு பேசினார்.

அந்த நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. அதாவது தஞ்சையில் ஷுட்டிங் நடந்த போது பலரும் அவரை தஞ்சை பெரிய கோவிலுக்கு போகச் சொன்னார்கள்.

கோவில்களுக்கு செலவு

கோவில்களுக்கு செலவு

நான் ஏற்கனவே அங்கு சென்றிருக்கிறேன். ஆனால் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்ற பிறகு கோவிலுக்கு போகும் எண்ணமே வரவில்லை. அந்த அளவுக்கு மோசமாக இருந்தது அந்த மருத்துவமனை. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்க அதிகம் செலவு செய்கிறீர்கள், கோவில்களை பராமரிக்க அதிக செலவு செய்கிறீர்கள், உண்டியலில் காசு போடுகிறீர்கள்.

பலரும் எதிர்ப்பு

பலரும் எதிர்ப்பு

அதற்கு பதில் பள்ளிக்கூடங்களை கட்டலாம், மருத்துவமனைகளை பராமரிக்கலாம் என்று பேசியிருந்தார். அவர் தஞ்சை பெரிய கோவிலை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்கள் குறித்த அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரவித்து வருகின்றனர்.

மறைமுக எச்சரிக்கை

மறைமுக எச்சரிக்கை

நெட்டிசன்களும் அவரை ஒரு வழியாக்கி வருகின்றனர். இந்து அமைப்புகளும் ஜோதிகாவை உண்டு இல்லை என செய்து வருகின்றனர். இதனிடையே அவர் விருது விழாவில் பேசிய பேச்சையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஜோதிகாவின் பேச்சைக் கேட்டு மறைமுகமாக எச்சரித்திருக்கிறார் இயக்குநர் மோகன்.

தொட்டால் கெடுவார்கள்

தொட்டால் கெடுவார்கள்

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X