Mohan G: நேற்று ஒரு வீடியோ போட்டேன்.. இன்னைக்கு திரௌபதி 2 ஹவுஸ் ஃபுல்.. சந்தோஷத்தில் மோகன் ஜி!

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி கடந்த 23ஆம் தேதி வெளியான படம் திரௌபதி 2. அதே தேதியில் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதால், திரௌபதி 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பே கிடைக்கவில்லை. இதனால் இயக்குநர் மோகன் ஜி தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இன்று அதாவது ஜனவரி 24ஆம் தேதி படம் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் திரண்டு வந்து படம் பார்த்துள்ளனர் என்று மோகன் ஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று வீடியோ வெளியிட்டது மட்டும் இல்லாமல், தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதாவது, " திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை..

Director Mohan G Interview About How Draupathi 2 Picks After His Sad Video

மக்களை நம்பி: மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G" என்று பதிவிட்டிருந்தார். இது மட்டும் இல்லாமல், வீடியோ ஒன்றையும் வருத்தத்துடன் வெளியிட்டிருந்தார்.

மகிழ்ச்சி: இந்நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு கிடைத்து விட்டதாகவும், படம் இன்று முதல் பிக்கப் ஆகி நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாகவும், சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரலாற்றை ஆய்வு செய்துதான் இந்த படத்தை எடுத்துள்ளேன். வரலாற்றில் இந்தியா மீது படையெடுத்து வந்தவர்கள், இங்கிருந்த இந்து மக்களை எப்படி மதமாற்றம் செய்ய முயற்சித்தனர். அதை இங்கிருந்த மக்கள் எப்படி தடுத்தனர் என்பதை நான் படமாக எடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X