1000 பேர் வந்தாலும்.. ஒரு முடியைக் கூட புடுங்க முடியாது.. சூர்யா ரசிகர்களுடன் மோதும் மோகன் ஜி!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சினிமாத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உயிரிழப்பது என்பது வேதனைக்குரிய விஷயம் என்றாலும், அவ்வப்போது இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா சூர்யா குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சூர்யா குறித்த கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்திருந்தார் மோகன் ஜி. இந்நிலையில் மோகன் ஜிக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஸ்டண்ட் சில்வா கூறுகையில், " நடிகர் சூர்யா சுமார் 7,8 வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சுரன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுதார். இதற்காக அவர் பணமும் கட்டினார். அதன் பின்னர்தான் பல தயாரிப்பு நிறுவனங்கள் இதனைப் புரிந்து கொண்டனர். முதன் முதலாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுவதுமாக கட்டி கொடுத்தவர் அவர். இதற்கு ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சம் செலவாகும். அந்த பணத்தை கட்டினார் சூர்யா" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட்டில் உள்ள 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சுரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, " இங்க இருக்க நடிகர்களுக்கு ஏன் இப்படி எல்லாம் தோணல.. வாழ்த்துகள் சார் என கேப்ஷன் இட்டிருந்தார். இதனால், சூர்யா ரசிகர்களுக்கும் மோகன் ஜிக்கும் இடையில் பெரிய வாக்குவாதமே ஏற்பட்டுள்ளது.

Director Mohan G Kshatriyan Fight With Suriya Fans Regards Stunt Union Welfare and Insurance
Photo Credit:

ஸ்டண்ட் யூனியன்: மோகன் ஜியின் அந்த பதிவுக்கு கிறிஸ்டோபர் கனகராஜ் என்ற விமர்சகர் சூர்யா இதை ஏற்கனவே செய்துவிட்டார் என பதில் அளித்தார். அதற்கு, " இல்லை சார்.. ஸ்டண்ட் பண்ணுறதுக்கு முன்னாடி ஒவ்வொரு ஃபைட்டருக்கும் ரூபாய் 300 கொடுக்கிறோம். இதுதான் அந்த காயங்களுக்கு வெல்ஃபேர் ஃபண்ட். அதைத் தவிர வேற எந்த இன்சூரன்ஸ் பாலிசியோ அல்லது ஸ்கீமோ ஸ்டண்ட் யூனியனில் இதுவரைக்கும் இல்ல. எஸ்ஆர்எம் மட்டும் தான் பாலிசி எடுக்க முயற்சி பண்ணுச்சு, அப்புறம் அவங்களும் மறுத்துட்டாங்க என பதில் அளித்தார்.

வாக்குவாதம்: இவரது இந்த பதிலுக்கு சூர்யா ரசிகர்கள், ஸ்டண்ட் சில்வாவின் வீடியோவைப் பகிர்ந்து 10வருடமாக சூர்யா இதைச் செய்து வருகிறார் எனக் கூறினார்கள். அதற்கு, " எந்த பத்து வருடம்??? நீங்களா விருப்பப்பட்டு ஸ்டண்ட் செய்து உயிரை மாய்த்தால் நாங்கள் பணம் தர மாட்டோம் என எந்த நிறுவனமும் பாலிசி தர தயாராக இல்லை.. அப்படி இருக்கும் போது இவர் யாருக்கு எந்த கம்பெனி பாலிஸி கட்டினார். அப்படி கட்டினால் உயிர் இழந்தவர்கள் பெற்ற காப்பீடு தொகை எங்கே?" என பதில் கேள்வி எழுப்பினார் மோகன் ஜி. மேலும், ஸ்டண்ட் யூனியன் நெம்பர் ஆன்லைனில் உள்ளது. அவர்களுக்கு போன் செய்து விவரத்தை சரி பார்த்துக் கொள். பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மாதிரி இங்கு பொய் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம் எனவும் மோகன் ஜி கூறியது, வாக்குவாதமாக மாறி விட்டது.

Director Mohan G Kshatriyan Fight With Suriya Fans Regards Stunt Union Welfare and Insurance
Photo Credit:

சண்டை: மேலும் நடிகர் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களின் நலத்திட்டங்களுக்கு நிதியாக ரூபாய் 10 லட்சம் கொடுத்திருக்கலாம். அது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என இன்ஸ்சுரன்ஸ் ஸ்கீம் எதுவும் இல்லை. ஸ்டண்ட் கலைஞர்கள் அவ்வளவு ஆபத்தான் சண்டைக் காட்சிகளைச் செய்கிறார்கள். உங்களுக்கு பிடித்த நடிகருக்காக இங்கு கத்திக் கொண்டு இருக்காதீர்கள் எனத் தெரிவித்தார். இதற்கு சூர்யா ரசிகரோ, நேற்று இயக்குநர் பிரியன், இன்னைக்கு மோகன் ஜி ரெடியா பசங்களா? எனக் கேட்டார். அதற்கு மோகன் ஜி, "நீ இன்னும் 1000 பேரை கூட்டிட்டு வா உன்னால என்னோட ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார். இவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் பேசு பொருளாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X