Mohan G: 500 கோடி.. இதுக்கு தகுதியான படம் திரௌபதி 2 இல்ல.. மனசில் இருப்பதை கொட்டிய மோகன் ஜி
சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் திரௌபதி 2. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம். படம் நேற்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸ் ஆனது.நேற்று அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரீலீஸ் ஆனது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் குறிப்பாக அதிக அளவிலான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும்படியான பெரிய தியேட்டர்களில் மங்காத்தா படமே ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் தனது திரௌபதி 2 படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கான ஓபனிங் கிடைக்கவில்லை என்றும், மங்காத்தா ரீ ரிலீஸ் திரௌபதி 2 படத்தை மொத்தமாக சிதைத்து விட்டது என்றும் பேசி வீடியோவும், எக்ஸ் பக்கத்தில் போஸ்ட்டும் போட்டுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.
குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. ஆனால் படத்தின் கலெக்ஷன் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. எனக்கு திரை உலகில் சப்போர்ட் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை. எனது படங்களுக்கு பொதுவாகவே, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் நல்ல வசூல் இருக்கும். ஆனால் இம்முறை மங்காத்தா ரீ ரிலீஸால் எனது படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை.

மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் இந்த அளவுக்கு எங்கள் படத்தை பாதிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த படம் நமது வரலாற்றை பேசுகிறது. நமது இந்து மதத்தைப் பற்றி பேசுகிறது. தயவு செய்து படம் பார்த்தவர்கள், படம் பார்க்காதவர்களிடம் படம் குறித்து சொல்லுங்கள். படம் குறித்து வீடியோ பதிவிடுங்கள். சிலர் வேண்டும் என்றே நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக படம் எடுக்கிறேன் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத் தமிழன் மற்றும் தமிழா தமிழா பாண்டியன் என இருவரும், நான் ஆர்.எஸ்.எஸ். இடம் ரூபாய் 500 கோடி வாங்கி விட்டதாகவும், அதில் தான் படம் எடுத்துள்ளேன் என்றும் பேசுகிறார்கள். அப்படி நான் பணம் வாங்கி இருந்தால் இந்த வீடியோவே போட வேண்டி இருக்காது. எனக்கு மக்கள் மீதுதான் நம்பிக்கை உள்ளது, அவர்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன்" என்று பேசி உள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











