twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கல்லாம் அதை சொல்லக்கூடாது.. காட்மேனுக்கு எதிராக கருத்து கூறிய இயக்குநர்.. விளாசிய நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: வெப்மேன் சீரிஸ்க்கு எதிராக கருத்துக்கூறிய பிரபல இயக்குநரை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

    Recommended Video

    God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram

    வண்ணாரப் பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் திரௌபதி.

    வெறும் 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. நாடகக் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்ததால் பல்வேறு சமுதாயத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

    இதுவும் வெறி தான்.. தொடர்ந்து ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.. பதிவை டெலிட் செய்த சாரா அலி கான்!இதுவும் வெறி தான்.. தொடர்ந்து ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.. பதிவை டெலிட் செய்த சாரா அலி கான்!

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    அதே நேரத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியானது முதலே சிலர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பல எதிர்ப்புகளை மீறி படம் வெளியாது. சமூக ரீதியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

    காட்மேன் வெப்சீரிஸ்

    காட்மேன் வெப்சீரிஸ்

    திரௌபதி படத்திற்கு பிறகு இயக்குநர் மோகன் ஜி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் காட்மேன் வெப் சீரிஸ் குறித்து கருத்து கூறியுள்ளார் மோகன் ஜி.

     வன்மத்தை அல்ல

    வன்மத்தை அல்ல

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், காட்மேன் சீரியசை தடை செய்ததில் எந்த தவறும் இல்லை.. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை இழிவாக பேசுவதை இன்று ஆதரிக்க துடிப்பவர்கள் நாளை தான் சார்ந்த சமுதாயத்தை விமர்சித்து யாராவது தயாரித்தால் என்ன மனநிலையில் இருப்பார்கள்.. படைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்மத்தை அல்ல.. என பதிவிட்டுள்ளார்.

     நீங்க பேசாதீங்க

    நீங்க பேசாதீங்க

    இதனை பார்த்த நெட்டிசன்கள், இயக்குநர் மோகன் ஜியை விளாசி தள்ளி இருக்கின்றனர். திரௌபதி போன்ற ஒரு சாதிய படத்தை கொடுத்துவிட்டு நீங்கள் எல்லாம் இதைப் பற்றி பேசவேக்கூடாது என்றும் வெளுத்து வாங்கியுள்ளனர். சில நெட்டிசன்கள் உங்களின் திரௌபதி படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

     வெட்கமே இல்லையா

    வெட்கமே இல்லையா

    இன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் கருத்துப்படி பார்த்தால் திரௌபதி படத்தையும் தடை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். சிலர், 'படைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்மத்தை அல்ல' என உங்களால் எப்படி வெட்கமே இல்லாமல் எழுத முடிந்தது என்றும் விளாசியிருக்கின்றனர்.

    English summary
    Director Mohan G oppossing Godman webseries. Netizens slams him very badly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X