+2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற கிங்காங் மகள்.. பிரபல இயக்குநர் என்ன சொன்னாரு பாருங்க!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், பிரபலங்களின் குழந்தைகள் எல்லாம் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சூர்யா மகள் தியா மற்றும் தனுஷ் மகன் யாத்ராவின் மார்க் இதுதான் என சில தகவல்கள் தீயாக பரவி வருகிறது. அது எந்தளவுக்கு உண்மை என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் அதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் கிங்காங் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், பலரும் அவருக்கும் அவரது மகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அதை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கிங்காங்: பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஊரத் தெரிஞ்சுகிட்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கிங்காங். ரஜினிகாந்தின் அதிசய பிறவி, விஜய்யுடன் போக்கிரி மற்றும் சுறா, சீயான் விக்ரம் நடித்த கந்தசாமி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கிங் காங் மகள்: 52 வயதாகும் நடிகர் கிங்காங் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் எஸ். சக்தி பிரியா எனும் மகள் தான் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளார். சங்கர் எனும் தனது பெயரை சினிமாவுக்காக கிங்காங் என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு மதிப்பெண்: நடிகர் கிங்காங்கின் மதன் சக்தி பிரியா 12-ஆம் வகுப்பு தேர்வில் 404 மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த சந்தோஷத்தை ட்விட்டர் பக்கத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து வெளியிட்டிருந்தார் கிங்காங்.
மோகன் ஜி வாழ்த்து: நடிகர் கிங்காங்கின் மகள் சக்தி பிரியா 12-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற நிலையில், "வாழ்த்துகள் ணா " என ட்வீட் போட்டு இயக்குநர் மோகன் ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











