இறைவா... தங்கமான மனிதர்.. குணப்படுத்தி அனுப்பு.. லொள்ளு சபா சேசு குணமடைய மோகன். ஜி பிரார்த்தனை!
சென்னை: லொள்ளு சபா மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இயக்குநர் மோகன். ஜி பிரார்த்தனை செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானார்.

நடிகர் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் இருந்து சேசுவுடன் பணியாற்றி வரும் நிலையில், தனது பல படங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாரடைப்பு: தொடர்ந்து காமெடி நடிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் நிலையில், மாரடைப்பு என்கிற வார்த்தை கேட்டாலே ரசிகர்களுக்கு பயம் தொற்றிக் கொள்ள நேரிடுகிறது. விவேக், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்கள் உயிரிழந்த நிலையில், காமெடி நடிகர் சேசுவுக்கு மாரடைப்பு என்றதும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பதறிப் போயுள்ளனர்.
லொள்ளு சபா: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தனது பாடி லேங்குவேஜ், ஃபேஸ் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிரிக்க வைத்து வந்த சேஷு சந்தானம் நடிப்பில் வெளியான பல படங்களிலும் அவருடன் காம்பினேஷன் காட்சிகளில் நடிக்க வைத்து சிரிக்க வைத்துள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி: கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மெட்ராஸுக்கு இவரை அழைத்துக் கொண்டு போய் தான் மெட்ராஸ் ஐ நோயை ஊருக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆத்தா கண்ணை குத்திட்டா என சந்தானம் நம்ப வைத்திருப்பார். இவருக்கும் நிழல்கள் ரவிக்கும் இடையே நடக்கும் அந்த காட்சியெல்லாம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் சலங்கை கட்டிக் கொண்டு இவர் ஆடும் காட்சிகளும் வேறலெவலில் இருக்கும். ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி ஓடிக் கொண்டிருக்கிறது.
மோகன். ஜி பிரார்த்தனை: "இறைவா... தங்கமான மனிதர்.. குணப்படுத்தி அனுப்பு.. சேசு அண்ணன் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களின் இயக்குநர் மோகன். ஜி தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

நெட்டிசனுக்கு பதிலடி: ”அதான் நல்ல மனுசர்களுக்கெல்லாம் இந்த மாதிரி நோய் வருது... சனியன் ஜாதி வெறி பிடித்த உனக்கு வரமாட்டுக்குதே” என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் போட, ”எனக்கும் ஒரு நாள் வரும்டா.. அப்ப கொண்டாடு.. இப்ப இந்த மனிதனுக்காக வேண்டிக்கோ..” என கமெண்ட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











