‘ஏகே 61’ ஃபர்ஸ்ட் லுக் எப்போ சார்..போனி கபூரிடம் அப்டேட் கேட்டு நச்சரிக்கும் இயக்குநர்!
சென்னை : தயாரிப்பாளர் போனி கபூருக்கு இயக்குநர் மோகன் ஜி 'ஏகே 61' ஃபர்ஸ்ட்லுக் எப்போ என கேட்டு நச்சரித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித் குமார் நடித்த வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அந்த திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டன.
மீதி இருக்கும் காட்சிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

பாங்காங்கில் ஷூட்டிங்
அஜித் தனது பைக் பயணத்தை ஒரு வழியாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், 61வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பட குழுவினர் பாங்காங் சென்றுள்ள நிலையில் நாளையோ அல்லது நாளை மறுதினமோ அஜித்தும், நடிகை மஞ்சுவாரியாரும் பாங்காங் செல்ல உள்ளனர்.

டைட்டில் என்ன
நீண்ட நாட்களாக ஏகே 61வது படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அஜித் ரசிகர்கள் நேரடியாகவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது வெளியாகும் என சோஷியல் மீடியாவில் கேள்வி கேட்டுவந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.4

அப்டேட் கேட்ட இயக்குநர்
இந்தநிலையில், பகாசூரன் படத்தின் தயாரிப்பாளர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஏகே 61' படத்தின் ஃபர்ஸ்ட் வெளியீடு எப்போது என்று சொல்லுங்கள் போனிகபூர் சார், அதன்படி நானும் எனது 'சிவ சிவாயம் பாடல் ரிலீஸ் நேரத்தை மாற்றி கொள்கிறேன், ஒரே நாளில் இரண்டும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரிப்பாளர்கள் என்று பார்த்தால் இயக்குநரே இவ்வாறு கேட்டுள்ளார்.

பகாசூரன்
இயக்குநர் மோகன் ஜி செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் செல்வராகவனுடன் நட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


Click it and Unblock the Notifications











