பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. விஜய் சேதுபதிக்கு நச் பதிலடி கொடுத்த பிரபல இயக்குநர்!
சென்னை: பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிய நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் அதிரடி பதில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஒரு நடிகராகவும் உள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி, வில்லனாகவும் நடித்து வருகிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் வில்லன்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகர் உருவெடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. சில தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் பேசி தலைப்புச் செய்தியாகவும் ஆகி வருகிறார் விஜய் சேதுபதி.

வேலைய பாருங்கடா..
அண்மையில் நடிகர் விஜய் தன்னை மதமாற்றம் செய்ததாக வெளியான தகவலை அறிந்த விஜய் சேதுபதி, போய் வேலைய பாருங்கடா என காட்டமாக டிவிட்டியிருந்தார். அவரது இந்த பதிலால் ரசிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர்.

கடவுள் வரமாட்டார்
மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் பேசியபோது கூட கடவுள் கொள்கை எதிராகவே பேசினார் விஜய் சேதுபதி. கொரேனாவில் இருந்து பேச கடவுள் வரமாட்டார் என்கிற தொனியில் மனிதனை காக்க மனிதன் தான் வரவேண்டும் என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

சிறப்பு என சப்போர்ட்
அதனை தொடர்ந்து கோவில்கள் குறித்து ஜோதிகா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் அவரது கணவரும் நடிகருமான ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார். அதனை தனது பக்கத்தில் ஷேர் செய்த விஜய் சேதுபதி சிறப்பு தம்ப்ஸ்அப் செய்திருந்தார்.

பசிக்கு தடுப்பூசி
தொடர்ந்து இதுபோன்று ஏதாவது ஒரு செய்தியில் சிக்கி அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில் பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே! என குறிப்பிட்டிருந்தார்.
Recommended Video

உலகம் எப்படி இயங்கும்?
அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் எதிர்த்தும் ஆதரித்தும் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அவரது பதிவுக்கு பிரபல இயக்குநரான மோகன் ஜி, பதில் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா.. என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











