சார்பட்டா பரம்பரை படம் குறித்து திரௌபதி இயக்குநர் விமர்சனம்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

சென்னை: ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் குறித்து திரௌபதி இயக்குநர் மோகன்ஜி டிவிட்டியுள்ளார்.

மெட்ராஸ், கபாலி, காலா படங்களை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை.

பாக்ஸிங்கை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன், தெலுங்கு நடிகர் ஜான் கோக்கென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாஸிட்டிவ் விமர்சனம்

பாஸிட்டிவ் விமர்சனம்

நேற்றிரவு அமேஸானில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

வீட்டுக்கு போனா கைய தூக்க முடியாது | Sarpatta | Actor Arya Exclusive | Filmibeat Tamil
ரஞ்சித் ஃபுல் ஃபார்ம்

ரஞ்சித் ஃபுல் ஃபார்ம்

படத்தில் ஆர்யாவின் நடிப்பு அடுத்த லெவலை தொட்டிருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர். இதேபோல் பா ரஞ்சித் ஃபுல் ஃபார்மில் திரும்பி வந்திருப்பதாகவும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி

இதேபோல் பிரபலங்கள் பலரும் சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் திரௌபதி படத்தின் இயக்குநரான மோகன் ஜியும் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அமேசானில் மற்றொரு ஹிட்

அமேசானில் மற்றொரு ஹிட்

அவர் பதிவிட்டிருப்பதாவது, சார்பட்டா பரம்பரை படம் மொத்த டீம்மின் சிறந்த முயற்சி. நான் கடவுள் படத்திற்கு பிறகு ஆர்யா சாரின் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ். பசுபதி சார், ஜான் விஜய் சார், டான்சிங் ரோஸ் கேரக்டர் ஹைலி நோட்டப்பிள்.. ரஞ்சித் சாரின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. கேமரா வேலை & ஆர்ட் இயக்குநர் வேலை டாப். அமேசானில் மற்றொரு ஹிட்.. என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X