என்ன டிசைன் இவனுங்க.. இதுல அப்படி வேற கோரிக்கை.. 'குடி' மகன்களை விளாசிவிட்ட திரௌபதி இயக்குநர்!
சென்னை: ஊரடங்கின் போதும் 5 மடங்கு விலையை கொடுத்து மதுவை வாங்கி குடிக்கும் குடி மகன்களை இயக்குநர் மோகன் ஜி விளாசி தள்ளியிருக்கிறார்.
வண்ணாரப் பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அண்மையில் அவரது இயக்கத்தில் வெளியான படம் திரௌபதி.

நாடக்காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார் மோகன் ஜி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் ஜி, தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
அதுபோல் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் விலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மது பிரியர்களை விளாசியிருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அடுத்த நாள் செலவுக்கு கூட பலரிடம் காசில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.. ஆனால் ஒரு கூட்டம் ஐந்து மடங்கு விலை கொடுத்து வாங்கி தினமும் மது அருந்துகிறார்கள்.. என்ன டிசைன் இவனுங்க.. ஒரே ஒரு நாள் டாஸ்மாக் திறக்க கோரிக்கை வேற.. என விளாசியிருக்கிறார் மோகன் ஜி.


Click it and Unblock the Notifications











