கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!

சென்னை: திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன். ஜி நேற்று நடைபெற்ற சினிமா விழாவில் பங்கேற்று பேசும் போது, இயக்குநர் பா. ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

ரஜினிகாந்துக்கு தலித் அரசியல் தெரியாமலே பா. ரஞ்சித் இயக்கத்தில் கபாலி மற்றும் காலா படங்களில் நடித்தார் என்கிற பேச்சுக்கு பா. ரஞ்சித் சிரித்தது சூப்பர் ஸ்டாரை அவர் நக்கல் செய்து விட்டார் என சர்ச்சை வெடிக்க காரணமாக மாறியது.

Director Mohan G slams Pa Ranjith for Rajinikanth controversy row

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கு விளக்கம் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல், நம்முடைய சிரிப்புக்கு பவர் உள்ளது. சும்மா சிரிச்சதுக்கே பல அர்த்தங்களை கூறுகின்றனர் என பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களை மேலும், கோபத்தில்
ஆழ்த்தியது.

ரஜினி வழங்கிய வாய்ப்பு: அட்டகத்தி, மெட்ராஸ் என இரு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கினார். கபாலி படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், பா. ரஞ்சித் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதன் பின்னர் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. காலா படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் இணைந்து பணியாற்றவில்லை.

ரஞ்சித்துக்கு கண்டனம்: இயக்குநர் பா. ரஞ்சித்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் கொண்டு வந்துவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆனால், அவருக்கு தலித் அரசியல் தெரியாது என நக்கலாக எப்படி சிரிக்கலாம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் நன்றி கெட்ட ரஞ்சித் என்கிற ஹாஷ்டேகை டிரெண்டு செய்து பா. ரஞ்சித்தை திட்டித் தீர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் மோகன். ஜி இதுதொடர்பாக பேசியது தீயாக பரவி வருகிறது.

நன்றி இருக்கணும்: பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி அடுத்து திரெளபதி படத்தை நான் இயக்கும் போது எனக்காக ஃப்ரீயா நடித்துக் கொடுத்தார். அவருக்கே இன்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன். எந்த மேடையில் ஏறினாலும் அவருக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இடத்தில் கொண்டு போய் வச்சிருக்காரு, அவரை போய் நக்கல் பண்ணலாமா? கொஞ்சமாவது நன்றி உணர்வு இருக்கா ரஞ்சித் என மோகன். ஜி கேள்வி எழுப்பி விளாசி உள்ளார்.

ரஜினி சாரை அனைவருக்கும் பிடிக்கும்: ரஜினி சாரை தமிழ்நாட்டில் பிடிக்காத ஆளே இல்லாத நிலை இருந்தது. ஆனால், சமீப காலமாக அவர் மீது ஏகப்பட்ட ட்ரோல்கள் வர யார் காரணம் என தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர், ஆன்மிகவாதி, அவரைப் போய் கிண்டல் பண்ணி என்னத்த சாதிக்கப் போறீங்க என பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன். ஜி பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X