பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்..அந்த ஆசிரியரை சாகும்வரை தனி சிறையில் அடையுங்கள்.. பிரபல இயக்குநர் ஆவேசம்!

சென்னை: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை சாகும் வரை தனி சிறையில் அடைக்க வேண்டும் என பிரபல இயக்குநர் கொந்தளித்துள்ளார்.

Recommended Video

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு - Anbil Mahesh Poyyamozhi

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொள்வதாக பாலியல் புகார் எழுந்துள்ளது.

இந்தப் பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலன்.

இவர் மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவது, ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது என முன்னாள் மாணவ மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆசிரியர் மீது புகார்

ஆசிரியர் மீது புகார்

மேலும் மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வாட்ஸ்அப் மெஸேஜ்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியருக்கு கண்டனம்

ஆசிரியருக்கு கண்டனம்

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெஸேஜ்களை டெலிட் செய்தது தெரியவந்தது. ஆசிரியர் ராஜகோபாலனின் இந்த செயலுக்கு அரசியல் பிரமுகர்கள் திரை நட்சத்திரங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜகோபாலன் கைது

ராஜகோபாலன் கைது

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்றிரவு அவரை கைது செய்தனர்.

பிரபல இயக்குநர் காட்டம்

பிரபல இயக்குநர் காட்டம்

எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை சாகும் வரை தனி சிறையில் அடைக்க வேண்டும் என பிரபல இயக்குநர் கொந்தளித்துள்ளார்.

பாலியல் தொல்லைகள்

பாலியல் தொல்லைகள்

வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி. ஆசிரியர் ராஜகோபாலன் தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, தைரியமாக தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள புகாராக அளித்த அந்த மாணவிக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்..

சாகும் வரை தனி சிறை

சாகும் வரை தனி சிறை

ஆசிரியர் வர்க்கத்திற்கு களங்கம் ஏற்படுத்திய அந்த மிருகத்தை சாகும் வரை தனி சிறையில் அடையுங்கள்.. தண்டணைகள் கடுமையாக தர பட்டால் தான் பயம் முளைக்கும்.. இவ்வாறு இயக்குநர் மோகன் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X