twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேடைக்கு கீழே ஒரு பேச்சு.. மேடைக்கு மேலே ஒரு பேச்சு.. யாரை இப்படி சாடுகிறார் இந்த இயக்குநர்?!

    |

    சென்னை: மேடைக்கு கீழே ஒரு பேச்சு, மேடைக்கு மேலே ஒரு பேச்சு என சினிமா பிரபலங்களை குறிப்பிட்டு இயக்குநர் மோகன் டிவிட்டியுள்ளார்.

    வண்ணாரப் பேட்டை திரௌபதி ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் இயக்குநர் மோகன் ஜி. சமீபத்தில் வெளியான திரௌபதி படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

    நாடகக் காதலை தோலுரித்துக் காட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    சூப்பர் அப்டேட்.. பிரபாஸ், நாக் அஸ்வின் படம் எப்போ ஸ்டார்ட் ஆகுது.. எப்போ ரிலீஸ் தெரியுமா?சூப்பர் அப்டேட்.. பிரபாஸ், நாக் அஸ்வின் படம் எப்போ ஸ்டார்ட் ஆகுது.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

    15 கோடி ரூபாய் வசூல்

    15 கோடி ரூபாய் வசூல்

    இதனால் 50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் ஜி அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார்.

    உலகம் எப்படி இயங்கும்?

    உலகம் எப்படி இயங்கும்?

    அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என சென்டிமென்ட்டாக டிவிட்டியிருந்தார். அதனை பார்த்த மோகன், பசி எடுக்கலன்னா உலகம் எப்படி இயங்கும் என கேட்டு பதிலடி கொடுத்தார்.

    மேடையில் ஒரு பேச்சு

    மேடையில் ஒரு பேச்சு

    நேற்று மதுக்கடைகளை திறப்பதற்கு எதிராக டிவிட்டியிருந்தார். இந்நிலையில் மேடைக்கு கீழே ஒரு பேச்சு..மேடைக்கு மேலே ஒரு பேச்சு.. இதுவே தற்போது பல சினிமா பிரபலங்களின் உயிர் மூச்சு.. என சினிமா பிரபலங்களை சாடி டிவிட்டியிருக்கிறார்.

    பெயரை சொல்லுங்கள்

    பெயரை சொல்லுங்கள்

    அதனை பார்த்த நெட்டிசன்கள் விஜயையும் விஜய் சேதுபதியையும் தான் இப்படி சொல்கிறாரா என தங்களின் யூகத்திற்கு கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் பொதுவாக ஏன் சொல்கிறீர்கள் யார் என்று பெயரை சொல்லுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

    English summary
    Director Mohan G slams Some cinema artists for their stands. Netizens asking him to mention their name directly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X