twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோய் தீராது.. ஆனால் வலிமையான எண்ணம் ஏற்படும்.. மோடி யோசனைக்கு திரௌபதி இயக்குநர் ஆதரவு!

    |

    சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கேற்றக் கூறிய பிரதமர் மோடிக்கு திரௌபதி இயக்குநர் மோகன் ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி வீடியோ மெஸேஜ் வெளியிட்டார். அப்போது ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தரும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.

    Director Mohan G supports PM Modis Video Message

    இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அவரது இந்த கோரிக்கையை அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் விமர்சித்தும் ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தேசத்தின் மனவலிமையை, இறையாண்மையை, ஒற்றுமையை காட்டுவோம்.. இப்படி செய்தால் நோய் தீருமா என்றால் இல்லை தான்.. ஆனால் நமக்குள் ஒரு வலிமையான எண்ணம் ஏற்படும் என்பதற்காக ஒன்று படுவோம்.. கொரனாவிற்கு எதிராக அனைவரும் மனவலிமையுடன் ஒன்றுபடுவோம்.. என தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Mohan G supports PM Modi's Video Message. He has twitted about it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X