டவுசர அறுக்க மாட்டாங்க.. படத்த பாரு.. எதை அறுப்பாங்கன்னு தெரியும்.. மிரட்டும் திரௌபதி இயக்குநர்!

சென்னை: நடந்த சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்டி திரௌபதி இயக்குநர் மிரட்டி டிவிட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

DRAUPATHI MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

நாடகக்காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரௌபதி. இந்தப் படத்திற்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வாரம் ஆகியும் படத்திற்கான வரவேற்பு இதுவரை குறையவில்லை. 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது.

ஜெயித்துவிட்டார்

ஜெயித்துவிட்டார்

படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆன நிலையில் இன்னும் படம் குறித்த பேச்சு ஓயவில்லை. படம் வசூலை குவித்துள்ள நிலையில் இயக்குநர் மோகன் ஜியை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். இயக்குநராக வசூலை குவித்து ஜெயித்து விட்டார் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னையும் தனது படத்தையும் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் இயக்குநர் மோகன் ஜி.

கவனமா இருங்க

திரௌபதி ட்ரெயிலரை பார்த்து குப்பை என விமர்சித்த இயக்குநர் நவீன் முகமது அலியை அண்மையில் வான்ட்டடாக வம்பிழுத்தார் இயக்குநர் மோகன் ஜி. உங்கள் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்ட அவர், கிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க, விபத்து நடக்கலாம். பார்த்து கவனமா இருங்க என மிரட்டும் தொனியில் டிவிட்டியிருந்தார். அவரது இந்த டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வோர்ல்டு டூர்

வோர்ல்டு டூர்

அதனை தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவத்தின் போது எங்கே போனீர்கள் என்று கேட்ட நெட்டிசனுக்கும், வோர்ல்டு டூர் போனேன் என்று கூறி நச் பதிலடி கொடுத்தார். மேலும் புரூஃப் வேணுமா போராளி என்று கேட்டும் அலற விட்டார். அவரது டிவிட்டிற்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்ப்புகளும் எழுந்தது.

மிரட்டிய மாணவர்கள்

மிரட்டிய மாணவர்கள்

ஒரு படம் ஹிட்டானதும் என்னா பேச்சு பேசுகிறார் என்று விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆணைமலையில் பள்ளி மாணவிகளை போட்டோ எடுத்து காதலிக்க சொல்லி மிரட்டிய மாணவர்களை போலீசர் கைது செய்தனர். இந்த செய்தியை ஊடகம் ஒன்று திரௌபதியாய் மாறிய மாணவிகள் என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

பால்புட்டி பசங்க

அதனை தனது பக்கத்தில் ரீடிவிட் செய்திருக்கும் மோகன்ஜி, கருத்து ஒன்றையும் பதிவிட்டிருருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இப்ப பால்புட்டி பசங்க லைன்ல வந்து கதறுவானுங்க இதுல உண்மை இல்லன்னு.. வெறி புடிச்சவனுங்கன்னு.. இனிமே பெண்ணுங்க மேல கைய வச்சா டவுசர அறுக்க மாட்டாங்க.. படத்த பாரு.. எதை அறுப்பாங்கன்னு தெரியும்.. எனன தெரிவித்திருக்கிறார்.

கதறுறானுங்க

அவரது இந்த டிவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த டிவிட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். திரௌபதி ரிங்க்டோன் வச்சிருக்கறதுக்கே கதறுறானுங்க புரோ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X