கண்ட கண்ட கதையை படமெடுக்கும் பெரிய நிறுவனங்கள்.. இந்தியன் 2வை மறைமுகமாக கிண்டலடித்த இயக்குநர்!
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 படம் கடந்த வாரம் வெளிவந்தது. ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்த இப்படம் ஏழு வருட போராட்டத்திற்கு பிறகு வெளியாகி பெரும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இயக்குநர் ஜி மோகன் இந்தியன் 2 படத்தை மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில், கமல், காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என இந்தியன் 2 படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியன்: 1996ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில், நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்த சின்ன சின்ன விஷயத்தையும், ஊழலையும் உணர்வுபூர்வமாக காட்டி இருந்தார் இயக்குநர். அதுதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆனால்,இந்தியன் 2வில் இதுபோன்ற அம்சம் எதுவும் இல்லை என்றும், இது ஷங்கர் படம் போல இல்லை என்றும், அவருடைய திரை கதையில் ஏதோ மிஸ் ஆகிறது என்ற கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேபோல் முதல் பாகத்திற்கு உயிர் கொடுத்ததே ஏ ஆர் ரகுமானின் இசை தான். அதுவும் இரண்டாம் பாகத்தில் மிஸ் என வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் தயாரிப்பு தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வருத்தத்தில் லைகா: இந்தியன் 2 படத்திற்காக இதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்த லைக்கா இப்போது போட்ட பணத்தை எடுத்து விட முடியுமா என டென்ஷனில் இருக்கிறது. ஏற்கனவே லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள படத்தை முடித்து விட்டு தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுவதாக செய்தி பரவி வரும் நிலையில் இந்தியன் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், லைகா நிறுவனம் கவலையில் உள்ளது.

வசூல் பாதிப்பு: இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் 26 கோடியாகவும், இரண்டாவது நாளான சனிக்கிழமை 18 கோடியாகவும், ஞாயிற்றுக்கிழமை வசூல் 15 கோடியாக இருந்தது. ஆகமொத்தம் இந்த மூன்று நாட்களில் இந்திய அளவில் 59 கோடியை மட்டுமே இந்தியன் 2 திரைப்படம் வசூலித்துள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் இந்த வாரம் எதுவும் வெளியாத நிலையில் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்தோடு மோதிய பார்த்தினின் டீன்ஸ் படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
கிண்டலடித்த இயக்குநர்: இப்படி இந்தியன் 2 படம் குறித்து பலரும் கிண்டலடித்து வரும் நிலையில், படத்தின், ருத்ரதாண்டவம், பகாசூரன் படத்தை இயக்கிய மோகன் ஜி, இந்தியன் 2 படத்தை மறைமுகமாக கிண்டலடித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











