அதனாலதான் இவ்வளவு வன்மம்.. அடுத்த படத்தோட பேரும் இப்படிதான் இருக்கும்.. இயக்குநர் மோகன்ஜி தடாலடி!

சென்னை: திரௌபதி படத்திற்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று தெளிவாக புரிகிறது என இயக்குநர் மோகன் ஜி டிவிட்டியுள்ளார்.

Recommended Video

Draupathi Collection | Mohan G | Twiter Fight

திரௌபதி படம் பல எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி கடந்த 28ஆம் தேதி ரிலீஸானது. படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

படம் ரிலீஸான ஒரே வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஷாலினியின் சகோதரரான ரிச்சர்டு ரிஷி இந்த படத்தில் லீடிங் ரோலில் நடித்திருக்கிறார். இதன் மூலம் பெரிதும் உற்றுநோக்கப்பட்டுள்ளார். இதேபோல் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஷீலாவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதேபோல் கருணாஸ், நிஷாந்த், இளங்கோ, கோபி என பலரும் தங்களின் நடிப்பால் பாராட்டை பெற்றுள்ளனர்.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

படம் நாடக்காதலை பற்றி பேசுவதால் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர். ஆனால் அதே நாடகக் காதலுக்காக பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இயக்குநர் மோகன்ஜிக்கு பெரும் பலமே வந்துள்ளது. இந்நிலையில் திரௌபதி படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என புரிகிறது என்று கூறி டிவிட்டியிருக்கிறார் மோகன்ஜி.

விரைவில் அறிவிப்பு

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், திரெளபதின்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்.. என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

துணை நிற்போம்

தமிழ் திரையுலகம் தவிர்க்க முடியாத இயக்குனர் அண்ணா நீங்க நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன். அதே நேரத்தில் முதலில் சாதி வெறியை வைத்து படம் எடுத்தீர்கள் அடுத்த மத வெறியா என கேட்டுள்ளனர் சில நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X