twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலங்க வைக்கும் போட்டோ.. அந்த கேவலமான அனுபவம் எனக்கும் உண்டு.. பிரபல இயக்குநர் உருக்கம்!

    |

    சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கலங்க வைக்கும் போட்டோவை ஷேர் செய்து பிரபல இயக்குநர் உருக்கமாக டிவிட்டியுள்ளார்.

    Recommended Video

    நடிகை ஜோதிகாவை மறைமுகமாக திட்டிய திரெளபதி இயக்குனர்

    தமிழகத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர பெரும்பாலான பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    மது பாட்டில்களை வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலை முதலே குடிகாரார்கள் டாஸ்மாக் கடைகளின் முன்பு வரிசைக்கட்டி நிற்க தொடங்கிவிட்டனர்.

    விஜய் ஆண்டனிக்கு ஹேட்ஸ் ஆஃப்.. ஹரிஷ் கல்யாணும் அதை கடைபிடிக்கப் போறாராம்.. மற்றவர்கள் எப்படி?விஜய் ஆண்டனிக்கு ஹேட்ஸ் ஆஃப்.. ஹரிஷ் கல்யாணும் அதை கடைபிடிக்கப் போறாராம்.. மற்றவர்கள் எப்படி?

    ஹேஷ்டேக்குகள்

    ஹேஷ்டேக்குகள்

    மதுக்கடைகளை திறப்பதற்கு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

    டிவிட்டரில் போட்டோ

    டிவிட்டரில் போட்டோ

    இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

    பசியால் வாடும் ஏழைகள்

    பசியால் வாடும் ஏழைகள்

    அதில் மதுக்கடைகள் முன்பு தடுப்புகள் கட்டப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருப்பதும் அதில் குடிக்காரர்கள் எப்போது கடைகள் திறக்கப்படும் என கட்டுப்பாட்டுடன் அமர்ந்து காத்திருக்கின்றனர். இந்த போட்டோவை ஷேர் செய்துள்ள மோகன் ஜி, பாவம்.. பசியால் வாடும் ஏழைகள்.. ரேசன் கடைக்கு கூட இவ்வளவு ஏற்பாடு இருக்காது.. என பதிவிட்டுள்ளார்.

    எனக்கும் உண்டு

    எனக்கும் உண்டு

    மேலும் குடித்துவிட்டு சரக்கு பாட்டீலுடன் சாலையோரம் கிடக்கும் அப்பாவை பார்த்து பள்ளிக்கூட யூனிஃபார்மில் இருக்கும் மகள் கதறி அழும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் மோகன் ஜி. அதில், இந்த வலி எனக்கு தெரியும்.. பல தடவை இந்த கேவலமான அனுபவம் உண்டு எனக்கு.. என் அப்பா, நண்பன், சொந்தக்காரன்னு பல தடவை இந்த கேவலமான அனுபவம் உண்டு.. அதனாலதான் இந்த கேவலமான குடியை எதிர்க்கிறேன்.. கடைசி வரைக்கும் எதிர்ப்பேன்.. என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Director Mohan G tweets about tasmac open. He has shared photos and says he will oppose tasmac.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X