'பகாசூரன்' அந்த காட்சியில் சிவக்குமாரின் பெயர்..சூர்யா அப்பாவை கேலி செய்த மோகன் ஜி.. பழிக்கு பழியா?

சென்னை : பகாசூரன் படத்தில் விவகாரமான காட்சியில் சூர்யாவின் அப்பாவை அசிங்கப்படுத்தும் வகையில் இயக்குநர் மோகன் ஜி காட்சி ஒன்றை வைத்துள்ளார்.

பகாசூரன் படத்தில், செல்வராகவன், நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா ஆகியோர் லீட்ரோலில் நடித்துள்ளனர்.

ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநரான மோகன் ஜி, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கி சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயர் எடுத்தார். பட்டியலின மக்களையும், சிறுபான்மையின மதத்தினரையும் இழிவுப்படுத்துவது போல அந்த படத்தில் பல காட்சிகள் இருந்ததால், மோகன் ஜி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். விமர்சனத்தில் சிக்கினாலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

விவகாரமான கருத்து

விவகாரமான கருத்து

திரௌபதி, ருத்ரதாண்டவம் படத்தைத் தொடர்ந்து நான்காவதாக பகாசூரன் என்ற படத்தை இயக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் மோகன் ஜி. செல் போஃனால், இன்றைய இளைய சமூதாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அதிரடியாக பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அமேசான் ஓடிடியில்

அமேசான் ஓடிடியில்

பிப்ரவரி 17ந் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோகன் ஜியின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இருந்த போதும், படம் கணிசமான வசூலை பெற்றது. தற்போது இப்படம் அமோசன் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

காலண்டர் சர்ச்சை

காலண்டர் சர்ச்சை

இந்நிலையில், பகாசூரன் படத்தில் ஒரு விவகாரமான காட்சியில் சுவற்றில், சிவக்குமார் & சன்ஸ் என்ற காலண்டர் வைக்கப்பட்டிருந்தது. இதை சரியாக நோட் பண்ண நெட்டிசன்ஸ், சூர்யாவை கேலி செய்யும் விதமாக மோகன் ஜி வேண்டும் என்றே அந்த காலண்டரை வைத்துள்ளார் என்றும், பாமக ஆதரவாளரான மோகன் ஜி ஜெய்பீம் அக்னி குண்ட காலண்டர் சர்ச்சைக்கு பழிதீர்த்துக் கொண்டார் என்றும் நெட்டிசன்கள் அவரை திட்டிதீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X