twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைம் பாஸ் ஆகலையா.. எனக்கு வர கமென்ட்ஸ எல்லாம் படிங்க.. நொந்துபோன திரௌபதி இயக்குநர்!

    |

    சென்னை: டைம் பாஸ் ஆகலையா எனக்கு வந்துள்ள கமென்ட்களை எல்லாம் படியுங்கள் என இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

    வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் திரௌபதி.

    நடிகர் ரிச்சர்டு ரிஷி, ஷீலா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 10 நாட்களில் 15 கோடி ரூபாய்க்கு மேல் குவித்து சாதனை படைத்தது.

    படத்திற்கு எதிர்ப்பு

    படத்திற்கு எதிர்ப்பு

    நாடக் காதலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டதால் மக்களின் வரவேற்பை பெற்றது. பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும் திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நெட்டிசன்கள் விமர்சனம்

    நெட்டிசன்கள் விமர்சனம்

    இதனால் குறிப்பிட்ட சிலரால் சமூக வலைதளங்களில் திரௌபதி படத்தின் இயக்குநரான மோகன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இயக்குநர் மோகனை ஜாதி வெறிப்பிடித்தவர் என சில நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர். அவர் என்ன பேசினாலும் அதை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    கமென்ட்ஸ படிங்க

    இதனால் நொந்துபோன இயக்குநர் மோகன், அதுகுறித்து டிவிட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் டைம் பாஸ் ஆகலயா.. எனக்கு வரும் கமெண்ட்ஸ் எல்லாம் படிங்க.. எத்தனை பேர் தொழில் பாதிக்கப்பட்டு இருக்குன்னு கண்கூடாக தெரியும்.. என நொந்து போயுள்ளார்.

    நல்ல டைம் பாஸ்

    இதனை பார்த்த அவரது ஆதரவு நெட்டிசன்கள் நாடகக்காதல் கோஷ்டிதான் கதறுகிறது, நீங்கள் ஃபிரியா விடுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மோகனின் அந்த டிவிட்டுக்கும் சில நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை விமர்சித்து வருகின்றனர். உன் ட்வீட் தான் நல்லா டைம் பாஸ் ஆகுது. கொரானாவே வந்தாலும் ட்வீட் போடுறத நிறுத்தாதே.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    கதை எழுதுங்கள்

    மற்றொரு டிவிட்டில், இந்த ஊரடங்கில் எல்லோரும் கதையாசிரியராக மாறுங்கள் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் எல்லாரும் கதாசிரியரா மாறுங்கள்.. திரையில் நீங்கள் பார்க்க விரும்பும் ஒரு கதையை உருவாக்குங்கள் இந்த 21 நாளில்.. உங்கள் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. நல்ல கதை சேர வேண்டிய இடத்தை சேரும்.. ஒரு பக்க கதை, நூறு பக்க கதை எதையாவது எழுதுங்க.. ஆனால் எழுதுங்க.. என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Director Mohan G worries for the comments he gets. Some netizens slams him for Draupathi movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X