Diwali 2024: இனிமேல் தீபாவளி ரிலீஸ் எல்லாம் அப்படி இருக்க வாய்ப்பே இல்லைபோல - மோகன் ஜி வருத்தம்

சென்னை: தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழில் மூன்று படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதேபோல் நேரடித் தெலுங்குப் படமான லக்கி பாஸ்கர் படமும் தமிழில் ரிலீஸ் ஆகின்றது. தமிழைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் மற்றும் கவின் நடிப்பில் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில நாட்களுக்கு முன்னர் இருந்தே தொடங்கிய நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இருந்து, ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

mohan g amaran diwali 2024

அதேபோல், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள மக்கா மிஷி பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் ட்ரைலர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

பிளடி பெக்கர்: இதையடுத்து, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளடி பெக்கர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். படத்தின் புரோமசன் வேலைகள் சிறப்பாக சென்றுகொண்டு உள்ளது. படத்தில் ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

mohan g amaran diwali 2024

டிக்கெட் விற்பனை: மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் மூன்று படங்களின் மீதுமே ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல நம்பிக்கை உள்ளது. ஆனால் மூன்று படங்களுக்கான டிக்கெட் முன் பதிவு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கியது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் ஒரு தியேட்டரில் கூட முதல் காட்சிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகவில்லை. அதாவது புக்கிங் ஆகவில்லை.

mohan g amaran diwali 2024

மோகன்.ஜி: இது திரைத்துறையினரை கொஞ்சம் அதிர்ச்சியில்தான் ஆழ்த்தியுள்ளது எனலாம். இது தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது பலரையும் கொஞ்சம் கலங்கச் செய்துள்ளது என்றே கூறலாம். அதாவது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " டிக்கெட் பிரஷரே இல்லை. தல, தளபதி படம் வந்தாதான் தியேட்டர்ஸ்க்கு தீபாவளி. இனிமே அதெல்லாம் அவ்வளவுதான் போல" என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் தங்காள் கடந்து வந்த தீபாவளி ரிலீஸ் படங்கள் குறித்து நினைத்து கலங்கி வருகின்றனர். பொதுவாகவே இவர்களின் படங்கள் தீபாவளிக்கு வருகின்றது என்றாலே, படத்தின் ப்ரி புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முதல் இரண்டு மூன்று தினங்களுக்கு விற்றுத் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

mohan g amaran diwali 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X