மங்காத்தாவால் செல்ஃப் எடுக்காத திரௌபதி 2.. ஆக்ரோஷமாக பொங்கிய மோகன் ஜி.. பேச்சில் அதை கவனித்தீர்களா?

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் திரௌபதி 2. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 30ஆம் தேதி வருவதாக இருந்தது. அதன் பின்னர், ஜன நாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாததால், பொங்கலுக்கு படம் வரும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் பொங்கலுக்கு நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் படம் வெளியானதால் திரௌபதி 2 படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் படம் ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸ்க்கு தள்ளிப்போனது.

இப்படி இருக்கையில் 23 ஆம் தேதியான நேற்று அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரீலீஸ் ஆனது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் குறிப்பாக அதிக அளவிலான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும்படியான பெரிய தியேட்டர்களில் மங்காத்தா படமே ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் தனது திரௌபதி 2 படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கான ஓபனிங் கிடைக்கவில்லை என்றும், மங்காத்தா ரீ ரிலீஸ் திரௌபதி 2 படத்தை மொத்தமாக சிதைத்து விட்டது என்றும் பேசி வீடியோவும், எக்ஸ் பக்கத்தில் போஸ்ட்டும் போட்டுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.

அவரது எக்ஸ் பக்கத்தில், " திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை..

Director Mohan G X Page Post About How Mankatha Re Release Ruining His Draupathi 2
Photo Credit:

தவறான கருத்து: மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மங்காத்தா ரீ ரிலீஸ்: மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது இரண்டு ஆண்டு கால கடுமையான உழைப்பு இந்த படம். மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் என்பது இந்த அளவுக்கு இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதனால் படம் பார்த்த மக்களிடத்தில் கருத்து கேட்டு, யூடியூபர்களால் வெகுஜன மக்கள் மத்தியில் படத்தை கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காதது எங்கள் தவறுதான். எனக்கென்று சினிமாவில் யாரும் இல்லை. ஒரு ட்வீட் போடக் கூட ஆள் இல்லை. மக்களை நம்பி நிற்கிறேன்" என்று மிகவும் வேதனையுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது இந்த வீடியோவுக்கும் போஸ்ட்க்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிந்து கொண்டு உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X