I am Sorry ஐய்யப்பா பாடல்.. இசைவாணியைக் கைது செய்யனுமாம்.. சொல்லுறாரு இயக்குநர் மோகன் ஜி!

சென்னை: கடந்த வாரத்தில் நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களைப் பேசியது பரபரப்பானது. இதனால் அவர்மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரி, நிபந்தன ஜாமீன் வாங்கி வெளியே வந்தார். இந்த சம்பவம் நடந்த பின்னர், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக் குழுவில் இருக்கக்கூடிய பாடகி இசைவாணி சபரிமலை ஐய்யப்பன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாகவும், அதற்கு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இணையத்தில் பேச்சுகள் எழுந்தது. இது தொடர்பாக இசைவாணி மீதும், இயக்குநர் பா. ரஞ்சித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி இசைவாணியை கைது செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் உருவாக்கிய இசைக் குழுதான் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ். இந்த இசைக்குழு கானா பாடல்கள் மூலம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை,ம் பிரிவினைவாதத்தை, மக்களின் அடிப்படை உரிமைகளை, குறிப்பாக உழைக்கும் மக்களின் வாழ்க்கையை கானாப் பாடல்களாகப் படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

mohan g singer isaivani

தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் கலை நிகழ்ச்சிகளில் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினர் கலந்து கொண்டு பாடுவர். இவர்களின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல், இவர்களின் கானா பாடல்கள் மூலம் மாநில உரிமைகளையும் பேசியதால், இவர்கள் வெகு சீக்கிரமாகவே, மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர்.

I am Sorry ஐய்யப்பா: இப்படியான நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, சபரிமலை தேவஸ்தானம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது பெரும் போராட்டமாக கேரளாவில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்தும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. அதன் ஒருவடிவம்தான் இசைவாணி பாடிய, "I am Sorry ஐய்யப்பா... நான் உள்ள வந்தா என்ன தப்பா" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஆண்கள்விட பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

mohan g singer isaivani

பிரச்னை: கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழு குறித்து தெரிந்து கொண்ட கேரள மக்கள், இவர்களை அங்கேயும் வந்து பாடச்சொன்னார்கள். பாடல் பாடி 5 அண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இப்போது பிரச்னையாக மாற்றப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், அது, I am Sorry ஐய்யப்பா பாடலைப் பாடும்போது இசைவாணி கழுத்தில் சிலுவை டாலர் அணிந்து கொண்டு பாடியுள்ளார் என இணையத்தில் உலா வந்த நிலையில், இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும்விதமாக இந்தப் பாடல் இருப்பதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

mohan g singer isaivani

கைது: இது தொடர்பாக கோவையில் இவர் மீது, இயக்குநர் பா. ரஞ்சித்மீதும் வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளது. இந்த பாடல் பாடியதற்காக பலரும் போன் செய்து கொலைமிரட்டல் விடுப்பதாக இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில், " ஐயப்பனுக்கு ஆண் பக்தர்களை விட பெண் பக்தர்கள் தான் அதிகம்.. இது புரியாமல் இயேசுவை ஒரு பக்கம் ஆதரிப்பது , மறு பக்கம் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் நம்பிக்கையை கேவலப்படுத்துவது. இப்படி மத பிரிவினை தூண்டி பாடல் பாடும் மார்கழி மக்களிசை பாடகி இசைவானியை கைது செய்ய வேண்டும்.." எனப் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X