Kanguva: கங்குவா தமிழ் படம் இல்லையா? யார் மீதோ இருக்கும் வன்மத்தை சூர்யா மீது கக்குகிறாரா மோகன் ஜி?

சென்னை: இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கொஞ்சம் ஆக்டிவாகவே இருக்கும் பர்சன். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று காலை, சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸ் குறித்தும், தீபாவளி ரிலீஸ் என்றாலே அது தல- தளபதி படங்கள்தான். இனி அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என மிகவும் வருத்தத்தோடு பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிக்கு ஒரு ட்விட்டர்வாசி அளித்த பதிலும் அதற்கு மோகன் ஜியின் ரியாக்‌ஷனும் கவனம் பெற்றுள்ளது.

அதாவது, தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இந்த மூன்று படங்களின் மீதுமே ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல நம்பிக்கை உள்ளது. ஆனால் மூன்று படங்களுக்கான டிக்கெட் முன் பதிவு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கியது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று காலை வரை ஒரு தியேட்டரில் கூட முதல் காட்சிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகவில்லை. அதாவது டிக்கெட் ப்ரீ புக்கிங் ஆகவில்லை.

mohan g suriya kanguva

இது திரைத்துறையினரை கொஞ்சம் அதிர்ச்சியில்தான் ஆழ்த்தியது. இது தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது பலரையும் கொஞ்சம் கலங்கச் செய்தது என்றே கூறலாம். அதாவது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " டிக்கெட் பிரஷரே இல்லை. தல, தளபதி படம் வந்தாதான் தியேட்டர்ஸ்க்கு தீபாவளி. இனிமே அதெல்லாம் அவ்வளவுதான் போல" என பதிவிட்டிருந்தார்.

தீபாவளி: இதனைப் பார்த்த விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் தாங்கள் கடந்து வந்த தீபாவளி ரிலீஸ் படங்கள் குறித்து நினைத்து கலங்கினர். பொதுவாகவே அஜித் - விஜய் படங்கள் தீபாவளிக்கு வருகின்றது என்றாலே, படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முதல் இரண்டு மூன்று தினங்களுக்கு விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால் இந்த தீபாவளி அப்படியாக இல்லை என்பதையே மோகன் ஜி குறிப்பிட்டிருந்தார்.

mohan g suriya kanguva

ஹிந்தி படம்: மோகன் ஜியின் இந்தப் பதிவுக்கு, ட்விட்டர்வாசி ஒருவர், 'அதான் கங்குவா வருதே' என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்ட்டினைப் பார்த்த மோகன் ஜி மிகவும் கிண்டலாக வடிவேலு டயலாக்கினை சொல்லுவதைப்போல், " ஹவ் டூ ஐ டெல் யூ.. கங்குவா ஹிந்தி படம் தம்பி" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

mohan g suriya kanguva

ஜெய்பீம்: மோகன் ஜியின் இந்த ரியாக்‌ஷனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள், மோகன் ஜியை கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்து வருகின்றனர். மேலும் ஜெய் பீம் படம் ரிலீஸ் ஆன பின்னர் நடைபெற்ற பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டுதான் மோகன் ஜி இவ்வாறு பதிவிட்டுள்ளார் எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கங்குவா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 14ஆம் தேது ரிலீஸ் ஆகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X