ஆமாம் இவரு எந்த கிரகம்.. விளக்கேற்றுவதை கிண்டலடித்த பிரபலத்தை கலாய்த்த திரௌபதி இயக்குநர்!

சென்னை: பிரதமர் மோடி நாளை இரவு விளக்கேற்ற கூறியதை கிண்டலடித்த பிரபலத்தை திரௌபதி இயக்குநர் மோகன் ஜி மரண கலாய் கலாய்த்துள்ளார்.

உலக நாடுகளை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வீடியோ மெஸேஜ்

வீடியோ மெஸேஜ்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் நேற்று வீடியோ மெஸேஜ் வெளியிட்ட பிரதமர் மோடி நாளை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைக்க வேண்டும் என்று கூறினார்.

எதிர்ப்பும் ஆதரவும்

எதிர்ப்பும் ஆதரவும்

மாறாக வீட்டில் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க வேண்டும் என்றும் மொபைல் லைட், டார்ச் லைட்டை ஒளிரச் செய்யலாம் என்று கூறினார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. பலரும் விளக்கு ஏற்றுவதால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கரண்ட் கம்பி வழியாக

இந்நிலையில் மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் கருத்தை கிண்டலடித்து டிவிட்டியிருந்தார். அதாவது, 'வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்' பிரதமர். கரண்ட் சப்ளையை நிறுத்த போகிறேன் என்று சூசகமாக அறிவிக்கிறாரோ? 'கரண்டு கம்பி வழியா கொரோனா பரவுது'ன்னு எதாவது சொல்லி இருக்கும் போலயே என கூறினார்.

இறந்தவர் வீட்டில்

மற்றொரு டிவிட்டில் வழக்கப்படி இறந்தவர் வீட்டில் தானே விளக்கேற்றுவார்கள், மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள்? என கேட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் பலமாதிரி பதில் கூறி வரும் நிலையில், இயக்குநர் மோகன் ஜியும் திருமுருகன் காந்தியை வச்சு செய்திருக்கிறார்.

எந்த கிரகம் இவரு?

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வேற்றுகிரகவாசி போல.. இந்து மத, கிறித்துவ மத மற்றும் நம் பண்பாடு, கலாச்சாரம் பற்றி தெரியாத ஒருவர் தான் இப்படி பேசுவார்.. இவர் எந்த கிரகம்னு கண்டுபுடிங்க.. என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X