ஜெயம் ரவியை செதுக்கிய உளி.. இயக்குநர் மோகன் ராஜா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ராஜா. பிரபல ஹீரோ ஜெயம் ரவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ராஜா தனி ஒருவன் படத்தின் மூலம் பெரும் அடையாளம் பெற்றார். இன்று அவர் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் மோகன் ராஜவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

ஜெயம் படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்கு படத்தின் ரீமேக்கான அதில்தான் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். அவரது சகோதரர் மோகன் ராஜா இயக்குநராக அறிமுகமானார். இருவரும் எடிட்டர் மோகனின் பிள்ளைகள். ரீமேக் படமாக முதல் படம் அமைந்தாலும் மெகா ஹிட்டடித்தது. அன்றிலிருந்து ரவிக்கு ஜெயம் என்ற பட்டம் ஒட்டிக்கொண்டு ஜெயம் ராஜா ஆனார். மோகன் ராஜா முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Raja Jayam Ravi Jayam Raja

தொடர்ந்து ரீமேக்குகள்: இதற்கிடையே ஜெயம் படத்தை தமிழில் இயக்குவதற்கு முன்னதாகவே தென்காசிப்பட்டணம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார் அவர். ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு ரீமேக் ட்ராக்கையே தேர்ந்தெடுத்தார் மோகன் ராஜா. அதன்படி எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய படங்களை இயக்கிய அவர் தில்லாலங்கடியை தவிர்த்து மற்ற படங்களில் வெற்றியை பார்த்தார். மேலும் அந்தப் படங்களில் ஜெயம் ரவியே ஹீரோவாக நடித்தார்.

வேலாயுதம்: சூழல் இப்படி இருக்க ரீமேக் ட்ராக்கிலிருந்து தனது வண்டியை திருப்பினார் மோகன் ராஜா. அதன்படி விஜய்யை வைத்து கடந்த 2011ஆம் ஆண்டு வேலாயுதம் படத்தை இயக்கினார் ராஜா. அது அவரது முதல் சொந்தக் கதையும்கூட. அந்தப் படத்தை சமூக கருத்துள்ள கமர்ஷியல் படமாக உருவாக்கி வெற்றிப்படமாக மாற்றினார். அதனையடுத்து ராஜாவுக்கான டிமாண்ட் கோலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியது.

தனி ஒருவன்: ராஜாவின் கரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது தனி ஒருவன். ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் இந்தப் படத்திலும் சமூக அக்கறையுள்ள பல விஷயங்களை பேசியிருந்தார் ராஜா. அது அவர் மீதான மதிப்பை மேற்கொண்டு ரசிகர்களுக்கு உயர செய்தது. தொடர்ந்து வேலைக்காரன், காட் ஃபாதர் படங்களை இயக்கினார் அவர். அடுத்ததாக தனி ஒருவன் 2வை உருவாக்குகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் அவருக்கு மெகா வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜாவின் பிறந்தநாள்: இந்தச் சூழலில் மோகன் ராஜா இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 40 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வேறு சில தொழில்களிலும் ராஜா இன்வெஸ்ட் செய்திருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X