Don't Miss!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தனி ஒருவன் 2 படம் எப்போது.. நடிகரின் கேள்விக்கு பதில் சொன்ன இயக்குநர் மோகன் ராஜா!
சென்னை: தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற நடிகரின் கேள்விக்கு இயக்குநர் மோகன் ராஜா பதில் அளித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம் நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அரவிந்த் சுவாமி வில்லன் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதிரடி திருப்பங்களுடன் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் ஹிட்டானது.
அடல்ட் அலர்ட்.. அப்போ சின்ன பையன்.. இப்போ சின்ன பொண்ணு.. டைட்டானிக் ரோஸுக்கு இதே வேலையா போச்சு!

5 ஆண்டுகள் நிறைவு
இதனை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என இயக்குநர் மோகன் ராஜாவிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.

தனி ஒருவன் 2 எப்போது?
இதனை முன்னிட்டு இப்படத்தில் ஜெயம் ரவியின் டீமில் ஒருவராக இருந்த நடிகர் ஹரீஷ் உத்தமன், படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறி டிவிட்டியிருந்தார். மேலும் தனி ஒருவன் 2 எப்போது என்றும் கேட்டிருந்தார் ஹரீஷ் உத்தமன்.

விரைவில் அப்டேட்
அதனை பார்த்த இயக்குநர் மோகன் ராஜா, ரொம்ப மகிழ்ச்சி ஹரீஷ் உத்தமன், தனி ஒருவன் 2 குறித்து உங்களுக்கும் ரசிகர்களுக்குமான பதில், மிக வரைவில் தனி ஒருவன் 2 குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

நம்புகிறோம்
இதனை பார்த்த ரசிகர்கள், சார் தனி ஒருவன் வித்தியாசமான ஒரு படம், அதோட இரண்டாம் பாகம் என்றால், நிச்சயமா எல்லாரும் பெரிய எதிர்பார்ப்போடுதான் வருவாங்க.. கொஞ்சம் பிசுறு தட்டினாலும் ஃபர்ஸ்ட் பார்ட் மாதிரி இல்லன்னு சொல்லிடுவாங்க.. நீங்கள் இரண்டாம் பாகத்தையும் சிறப்பாக கொடுப்பீர்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.