தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்

சென்னை: டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய வாரிசை நடிக்க வைத்தது போல், அவருடைய அண்ணன் மோகன் ராஜா தனது வாரிசை விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

எடிட்டர் மோகன் ராஜாவின் வாரிசுகள் ராஜா, ரவி. இருவரும் சினிமாவில் 20 ஆண்டு காலமாக கலக்கி வருகின்றனர். இப்போது அவர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

Director Mohan Raja’s son Acts in new film with Vijay Antony

2001ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான ஹனுமான் ஜங்ஷன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இவர் ஒளிப்பதிவாளர் மோகன் அவர்களின் முத்த மகன். ஆரம்பத்தில் 2003ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் படம் தொடங்கி அதிகாரபூர்வமாக தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்ததால் இவரை திரையுலகில் ரீமேக் ராஜா என்று விமர்சிக்கப்பட்டவர்.

ஒரு படத்தை ரீமேக் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. அதை மீண்டும் படமெடுத்து, வெற்றி பெற செய்வது ஒரு பெரிய சவால் என்று அதற்கு பதிலடி கொடுத்தவர். மோகன் ராஜா தனது சகோதரர் ஜெயம் ரவியை வைத்து ஹாட்ரிக் வெற்றியாக எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியன் என தொடர்ச்சியாக ரீமேக் படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர்.

தனது முதல் ஒரிஜினல் நேரடி ஸ்கிரிப்ட் ஆன 2015ஆம் ஆண்டில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மூலம் தன்னாலும் நேரடியாக தமிழில் கதை தயார் செய்து படம் இயக்கி வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தவர். இப்படம் அந்த ஆண்டின் வெற்றியடைந்த திரைப்படங்களில் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் இயக்கத்தில் வெளியான ரீமேக் படங்கள் மூலம் ஜெயம் ரவியின் நடிப்பாற்றல் திரையுலகில் வெளிப்பட்டது. அவர் ஒரு முன்னணி ஹீரோவாக தமிழ் திரையுலகில் வலம் வருவதற்கு முக்கிய காரணம் தனது சகோதரர் மோகன் ராஜா தான். ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்ததும் மோகன் ராஜா தான். அவரை ஒரு முத்திரை பதிக்கப்பட்ட தமிழ் ஹீரோவாக வடிவமைத்துள்ளார் மோகன் ராஜா.

ஜெயம் ரவியின் மகன் அறிமுகமான டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து மோகன் ராஜாவும் தனது மகன் பிரணவ் மோகனை தமிழ் திரையுலகிற்கு அறிமுக படுத்தியுள்ளார். பாபு யோகீஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் திரைப்படத்தில் பிரணவ் மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேக் ஸ்டுடியோஸில் (knack studios) நடைபெற்றுவருகிறது. இப்படம் பிரணவ்விற்கு ஒரு வெற்றி வாய்ப்பை அள்ளித்தரும்.

ஒளிப்பதிவாளர் மோகன் குடும்பத்தில் மற்றுமொரு புதிய விதை திரையுலகில் விதைக்கப்பட்டுள்ளது. அது மேலும் மேலும் வளர்ந்து பெரிய மரமாக எங்களது வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X