இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன் தான்.. இயக்குனர் நெகிழ்ச்சி

சென்னை : தமிழரசன் படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார். என் மகன் நடிக்கும்படத்திற்கு இளைய ராஜா இசை அமைத்து இருப்பதை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறேன் என்றார்.

தமிழரன் படத்தின் இசை மற்றும் டீசர் அடையாரில் உள்ள ஒரு கோவிலில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி
ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இசை வெளியிட்டு விழாவில் பேசிய மோகன் ராஜா "ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். என் மகன் பிரணவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். பிரணவ் இப்படத்தில் அறிமுகம் ஆவதில் எனக்கு மிகவும் சந்தேஷம் மற்றும் இசைஞானி அவர்கள் என் மகன் நடிக்கும் காட்சிக்கு பின்னணி இசை அமைப்பதை நினைக்கும் போது மெய் சிலிர்ந்தேன் என்றார்.

Director Mohan Rajas son Pranav mohan introduced in tamizharasan movie

விழாவில் பேசிய விஜய் ஆண்டனி இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் ஒரு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இப்படம் ஜனவரி மாதம் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. இசைஞானி உடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி என்று பேசினார்.

Director Mohan Rajas son Pranav mohan introduced in tamizharasan movie

இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளர். ஒரு இசையமைப்பாளர் நடிக்கும் படத்திற்கு இசை அமைப்பது இதுவே முதல்முறையாகும். இப்படத்திற்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Mohan Rajas son Pranav mohan introduced in tamizharasan movie

எஸ்.என்.எஸ் மூவீஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்திற்கு,பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயாகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Director Mohan Rajas son Pranav mohan introduced in tamizharasan movie

இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் ரம்யா நம்பீசன், ராதா ரவி,ரோபோ சங்கர், சங்கீதா,யோகி பாபு மற்றும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி மற்றும் இந்தி நடிகர் சோனு (ஒஸ்தி பட வில்லன்) ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரியில் திரைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X