நான் எப்பவுமே உங்களோட பெருமைக்குரிய ரசிகன்... கவுண்டமணிக்கு வாழ்த்து சொன்ன மோகன்ராஜா

சென்னை : நடிகர் கவுண்டமணி தன்னுடைய 82வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள்மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் மோகன்ராஜாவும் தனது ட்விட்டர் அக்கவுண்டின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

82வது பிறந்ததினம்

82வது பிறந்ததினம்

Cநடிகர் கவுண்டமணி தன்னுடைய 82வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள்மூலம் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பெருமைக்குரிய ரசிகன்

பெருமைக்குரிய ரசிகன்

இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜாவும் தனது வாழ்த்துக்களை கவுண்டமணிக்கு ட்விட்டர் பக்கத்தின்மூலம் தெரிவித்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர் அத்துடன் தான் அவரது பெருமைக்குரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார்.

கவுண்டமணி தாயுடன் புகைப்படம்

மேலும் வேலாயுதம் படப்பிடிப்பின் இடையில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வல்லகொண்டபுரத்தில் கவுண்டமணியின் தாயாரை சந்தித்த பழைய புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். அவருடன் பேசியது குறித்து தான் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

கொரோனாவை தடுக்க முக்கியமான நான்கு விஷயங்கள் நடிகர் Sathyaraj அறிவுரை
திரைத்துறையில் ரசிகர்கள்

திரைத்துறையில் ரசிகர்கள்


நடிகர் கவுண்டமணியின் காமெடிக்கு ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் அவரது காமெடிக்கு ஏராளமான இயக்குர்கள் மற்றும் நடிகர்கள் ரசிகர்களாக காணப்படுகின்றனர். தொடர்ந்து தற்போதைய தலைமுறையிலும் அவரது காமெடிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X